பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
“புலேராவின் உள்ளூர் சுயாட்சி "(புலேரா கா பஞ்சாயத்து ராஜ்) தன்னாட்சி இதயத்துடன் ஓர் டிஜிட்டல் திரைப்படம்
Posted On:
05 MAY 2025 1:13PM by PIB Chennai
“புலேரா கா பஞ்சாயத்து ராஜ்” என்ற 3 பகுதிகளைக் கொண்ட டிஜிட்டல் திரைப்படங்கள் வரிசையில் அல்ஹுவா விகாஸ் என்ற 3-வது மற்றும் இறுதி திரைப்படத்தை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் பார்வையாளர்களிடம் பரவலாக சென்று சேர்ந்துள்ள இத்திரைப்படம் இந்தியா முழுவதும் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கிறது. 3-வது மற்றும் நிறைவு பகுதி தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தன்று (24.04.2025) வெளியிடப்பட்டது. இதுவரை 6 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் யூடியூபில் பார்வையிட்டுள்ளனர்.
அல்ஹுவா விகாஸ் திரைப்படம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளால் திரட்டப்படும் சொந்த வருவாய் ஆதாரங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. இது ஊரக இந்தியா முழுவதும் உள்ள பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் தற்சார்பை வலுப்படுத்துவதற்கு உதவுகிறது. இந்த திரைப்படம் உள்ளூர் வரிகளை உரிய நேரத்தில் செலுத்துவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு இது எவ்வாறு சேவை வழங்குவதை மேம்படுத்துகிறது என்பதையும், கிராம மேம்பாட்டை நீடிக்கச் செய்கிறது என்பதையும் எடுத்துரைக்கிறது. இதில் நீனா குப்தா, ஃபைசல் மாலிக், சந்தன் ராய், துர்கேஷ் குமார் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர்.
பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவதற்கான முன்மொழிவுகளில் கவனம் செலுத்தும் “ஆஸ்லி பிரதான் கோன்?” என்ற திரைப்படத்தின் யூடியூப் லிங்க்: https://www.youtube.com/watch?v=GVxadWl5Cjk&t=102s
ஸ்வாமித்வா திட்டத்தின் தாக்கத்தை எடுத்துரைப்பதோடு கிராமப்புற சமூகங்கள் வெளிப்படையான, திறன்மிக்க சேவைகளை எவ்வாறு பெறுவது என்பதை வெளிப்படுத்தும் மேரி பஞ்சாயத்து செயலி போன்ற கருவிகளின் டிஜிட்டல் நிர்வாகம் பற்றி எடுத்துரைக்கும் “புலேரா மே சோரி” என்ற திரைப்படத்தின் யூடியூப் லிங்க்: https://www.youtube.com/watch?v=d56hvDYu5yA&t=162s
பஞ்சாயத்துக்களை பொருளாதார ரீதியாக தற்சார்புடையதாக மாற்றுவதற்கு உகந்த, மக்கள் பங்கேற்பு மூலம் சொந்த வருவாய் ஆதாரங்களை விரிவுபடுத்துவது பற்றிய சிந்தனைகளை ஊக்குவிக்கும் “அல்ஹுவா விகாஸ்” என்ற திரைப்படத்தின் யூடியூப் லிங்க்: https://www.youtube.com/watch?v=KRW8Nu9Wivs
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2126985
***
(Release ID: 2126985)
TS/SMB/RR/KR
(Release ID: 2127065)
Visitor Counter : 13