சுற்றுலா அமைச்சகம்
எம்.ஐ.சி.இ தொழில் துறை உயர்தர வேலைகளை உருவாக்கும் ஒரு முக்கிய பொருளாதார உந்துசக்தியாக இருக்கும்: மத்திய சுற்றுலா அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத்
Posted On:
05 MAY 2025 8:33AM by PIB Chennai
மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகமானது ராஜஸ்தான் மாநில சுற்றுலாத் துறை, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து, 2025 மே 4 அன்று ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் 14வது கிரேட் இந்தியன் டிராவல் பஜாரை ஒட்டி, இந்தியா சந்திப்பு மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
இதில் உரையாற்றிய மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத், இந்தியாவின் கூட்டங்கள், ஊக்கநடவடிக்கைகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் தொழில் (எம்.ஐ.சி.இ) உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஒரு முக்கிய பொருளாதார உந்துசக்தியாக இருக்கும் என்று கூறினார். இந்தத் தொழில், வலுவான பொருளாதார வளர்ச்சி, உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் வலுவான அரசின் ஆதரவு ஆகியவற்றால் ஊக்குவிக்கப்பட்டு, உலகளாவிய சக்தி மையமாக வளர்ந்து வருவதாகக் கூறினார். மாநிலங்கள் அவற்றின் தனித்துவமான வழிகளில் சுற்றுலா வாய்ப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் இதன்மூலம், இந்தியா எம்.ஐ.சி.இ தொழிலில் சர்வதேச அளவில் தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது என்றும் அவர் குறிப்பிட்டார்.
10 இந்திய நகரங்களை உலகின் சிறந்த எம்.ஐ.சி.இ தொழில் மையங்களாக ஆக்குவதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமையின் வழிகாட்டுதலின் கீழ், மரபு மற்றும் புதுமைகளில் முன்னணியில் இருக்கும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் உலகின் மிகவும் போற்றப்படும் சுற்றுலா மற்றும் நிகழ்வுகளின் இடமாக மாறத் தயாராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
***
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2126905
TS/GK/LDN/KR
(Release ID: 2126961)
Visitor Counter : 16