கூட்டுறவு அமைச்சகம்
தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம், தேசிய கூட்டுறவு ஆர்கானிக்ஸ் லிமிடெட் மற்றும் இந்திய விதை கூட்டுறவு சங்கம் லிமிடெட் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா ஆய்வு செய்தார்
Posted On:
03 MAY 2025 9:53PM by PIB Chennai
தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் (என்சிஇஎல்), தேசிய கூட்டுறவு ஆர்கானிக்ஸ் லிமிடெட் (என்சிஓஎல்) மற்றும் பாரதிய பீஜ் சஹ்காரி சமிதி லிமிடெட் (பிபிஎஸ்எஸ்எல்) ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் புதுதில்லியில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளர், மூத்த அதிகாரிகள் மற்றும் திரு அனுபம் கௌசிக், திரு விபுல் மிட்டல் மற்றும் திரு சேத்தன் ஜோஷி (முறையே என்சிஇஎல், என்சிஓஎல் மற்றும் பிபிஎஸ்எஸ்எல் நிர்வாக இயக்குநர்கள்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய திரு அமித் ஷா, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், இந்த மூன்று தேசிய கூட்டுறவு நிறுவனங்களும் கூட்டுறவு அமைச்சகத்தால் 2023 ஆம் ஆண்டு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் உருவாக்கப்பட்டன என்றும், கூட்டுறவு ஏற்றுமதி, இயற்கையான உற்பத்தி மற்றும் தரமான விதைகளை மேம்படுத்துவதற்கான குடை அமைப்புகளாக செயல்படும் நோக்கத்துடன் இவை உருவாக்கப்பட்டன என்றும் கூறினார். இவை சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள்/துறைகள்/நிறுவனங்களுடன் இணைந்து 'அரசின் முழுமையான’ அணுகுமுறையின் கீழ் இயக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இருந்து சர்க்கரை, திரிபுராவின் நறுமண அரிசி, கரிம பருத்தி மற்றும் சிறுதானியங்களை ஏற்றுமதி செய்வதற்கான புதிய வாய்ப்புகளை ஆராயுமாறு திரு அமித் ஷா என்சிஇஎல்-க்கு அறிவுறுத்தினார். வளைகுடா நாடுகளுக்கு புதிய காய்கறிகள் மற்றும் சிறப்பு உருளைக்கிழங்கு வகைகளை ஏற்றுமதி செய்ய பெரிய நிறுவனங்களுடன் கூட்டு முயற்சிகளில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகளையும் திரு அமித் ஷா பரிந்துரைத்தார்.
பருப்பு இறக்குமதிக்காக ஆப்பிரிக்கா மற்றும் மியான்மரில் என்சிஇஎல் அலுவலகங்களை அமைக்கவும், கூட்டுறவு உறுப்பினர்கள் உலகளாவிய தேவையைப் புரிந்து கொள்ளவும், அவர்களின் விநியோக திறனைப் பகிர்ந்து கொள்ளவும் ஒரு பிரத்யேக வலைத்தளத்தை உருவாக்கவும் திரு அமித் ஷா பரிந்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2126629®=3&lang=1
***
RB/RJ
(Release ID: 2126723)
Visitor Counter : 14