வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லி மெட்ரோ ரயில் கழகத்தின் 31-வது நிறுவன தின விழாவில் மத்திய அமைச்சர் திரு. மனோகர் லால் மற்றும் முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா ஆகியோர் பங்கேற்றனர்

Posted On: 03 MAY 2025 8:01PM by PIB Chennai

தில்லி மெட்ரோ ரயில் கழகத்தின் 31-வது நிறுவன தின விழா இன்று புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் திரு மனோகர் லால் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா கௌரவ விருந்தினராகப் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தில்லியில் உள்ள சாதாரண குடிமகனின் அன்றாட வாழ்க்கையில் தில்லி மெட்ரோ முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை எடுத்துரைத்தார். எளிதான, நம்பகமான மற்றும் பாதுகாப்பான இயக்கம், ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என்று வலியுறுத்திய அவர், தில்லி மெட்ரோ போன்ற நகர்ப்புற போக்குவரத்து அமைப்புகள் நகர்ப்புற மக்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத பகுதியாக மாறியுள்ளன என்றும் கூறினார்.

2047 ஆம் ஆண்டில், இந்தியாவின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50% பேர் நகர்ப்புறங்களில் வசிப்பார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார். மேலும், நாட்டின் நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் இணைந்து, மெட்ரோ செயல்பாடுகளில் பசுமை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தீர்வுகளை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை திரு மனோகர் லால் வலியுறுத்தினார். மெட்ரோ அமைப்புகள் இந்தியாவின் ஒவ்வொரு நகரத்தின் உயிர்நாடியாக இருக்கும் என்று வலியுறுத்திய அவர், அவற்றின் தொடர்ச்சியான விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் ஸ்மார்ட், உள்ளடக்கிய மற்றும் எதிர்காலத்திற்கு உகந்த நகர்ப்புற மையங்களை உருவாக்குவதற்கு முக்கியமானது என்று வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2126593&reg=3&lang=1      

****

RB/RJ


(Release ID: 2126708) Visitor Counter : 7
Read this release in: English , Urdu , Hindi , Punjabi