பிரதமர் அலுவலகம்
சிவானந்த பாபாவின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
04 MAY 2025 10:58AM by PIB Chennai
காசியைச் சேர்ந்தவரும் பிரபல யோகா பயிற்சியாளருமான சிவானந்த பாபாவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"காசியில் வசித்துவந்த யோகா பயிற்சியாளரான சிவானந்த பாபா அவர்களின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. யோகாவிற்கும், அது தொடர்பான பயிற்சிகளுக்கும் தமது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அவர். அவரது வாழ்க்கை நாட்டின் அனைத்து தலைமுறையினருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும். யோகா மூலம் சமூகத்திற்கு சேவை செய்ததற்காக அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
சிவானந்த பாபாவின் சிவலோகப் பயணம் (மறைவு) காசியைச் சேர்ந்தவர்ளுக்கும், அவரிடமிருந்து உத்வேகம் பெற்ற கோடிக்கணக்கான மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இந்தத் துயரமான நேரத்தில் அவருக்கு எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன்.”
****
Release ID: 2126678
SM/PLM/RJ
(रिलीज़ आईडी: 2126699)
आगंतुक पटल : 60
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam