இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவிடமிருந்து ஒலிம்பிக் வீரர்கள் சாத்விக்-சிராக் மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதைப் பெற்றனர்

Posted On: 01 MAY 2025 6:01PM by PIB Chennai

ஒலிம்பிக் வீரர்கள் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் இன்று புதுதில்லியில் மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவிடமிருந்து மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதைப் பெற்றனர். இவர்கள் 2023-ம் ஆண்டில் பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தனர்.  ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்த நட்சத்திர பேட்மிண்டன் ஜோடி, 2023-ம் ஆண்டில் கேல் ரத்னா விருதுக்கான தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றது. இருப்பினும், அந்த நேரத்தில் போட்டிகள் காரணமாக அவர்களால் அதைப் பெற முடியவில்லை.

தற்போதைய உலகத் தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள அந்த இரட்டையர்களைப் பாராட்டிய டாக்டர் மாண்டவியா, “மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா நாட்டின் மிக உயர்ந்த விளையாட்டு விருதாகும் என்றும் சாத்விக் மற்றும் சிராக் ஆகிய நீங்கள் இருவரும் அசாதாரண திறமைகள் மற்றும் கடின உழைப்பின் மூலம் சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளீர்கள் என்றும் தெரிவித்தார்.  மதிப்புமிக்க பதக்கங்களைப் பெறுவதற்காக மூவர்ணக் கொடியுடன் பதக்க மேடையில் இருக்கும் போது, ​​அது உங்களுக்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் ஒரு கௌரவம் என்று கூறினார். நாட்டின் பெருமையை உயர்த்தியதற்காகவும், மூவர்ணக் கொடியின் மரியாதையை மேம்படுத்தியதற்காகவும், நீங்கள் இருவரும் கேல் ரத்னாவால் கௌரவிக்கப்பட்டுள்ளீர்கள்” என்று கூறினார்.

 

கேல் ரத்னா விருதைப் பெற்றதில் மகிழ்ச்சித் தெரிவித்த சிராக் ஷெட்டி, இந்த விருது நீண்ட காலமாக வழங்கப்பட வேண்டிய ஒன்று என்றும் இறுதியாக, இன்று எங்களுக்கு அது கிடைத்தது என்று குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2125832

----

SM/IR/KPG/DL


(Release ID: 2125942) Visitor Counter : 24