தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

கர்நாடகாவின் ஹூப்ளியில் ஒரு சிறுமி கடத்தப்பட்டு, வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது மற்றும் கைது செய்யப்பட்ட குற்றவாளி காவல் துறை நடவடிக்கையில் கொல்லப்பட்டது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது

Posted On: 30 APR 2025 3:13PM by PIB Chennai

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் ஒரு சிறுமி கடத்தப்பட்டு, வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் காவல்துறை நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட குற்றவாளி உயிரிழந்த சம்பவம் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் அது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த சம்பவம் 2025 ஏப்ரல்14  அன்று நடந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த செய்தியின் உள்ளடக்கம் உண்மையாக இருக்குமானால், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் கைது செய்யப்பட்ட குற்றவாளியின் மனித உரிமைகள் மீறப்பட்டதாக இருக்கும் என்று ஆணையம் கருதுகிறது. எனவே, இந்த விவகாரம் குறித்து நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த அறிக்கையில் இறந்த இருவரின் பிரேத பரிசோதனை மற்றும் நீதிமன்ற விசாரணை அறிக்கைகளும் அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2025 ஏப்ரல் 14, அன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின்படி, குளியலறையில் இருந்து சிறுமியின் உடல் மீட்கப்பட்ட உடனேயே, கோபமடைந்த குடியிருப்பாளர்கள் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி அசோக் நகர் காவல் நிலையத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே குற்றவாளியை காவல் துறையினர் கைது செய்து, விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர்களைத் தாக்க முயன்றதால் காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குற்றவாளிக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும், இதனால் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

*****

(Release ID: 2125449)

TS/IR/SG/DL


(Release ID: 2125568) Visitor Counter : 6