பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இஸ்ரோ தொழில்நுட்ப வழிகாட்டுதலின் கீழ், பழங்குடியினர் நல அமைச்சகம் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியன இணைந்து ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் 75 விண்வெளி ஆய்வகங்களை அமைக்க உள்ளன

Posted On: 30 APR 2025 4:00PM by PIB Chennai

வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, பழங்குடியினர் நல அமைச்சகமும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டும் இணைந்து நாட்டின் 19 மாநிலங்களில்  75 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் "விண்வெளி ஆய்வகங்கள்" அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளன. இதன் மூலம் பழங்குடியின மாணவர்கள் உயர் கல்வி மற்றும் தொழில்கல்வி பயிலும் வாய்ப்புகளையும், பல்வேறு துறைகளில் லாபகரமான வேலைவாய்ப்பையும் பெற முடியும்.

விண்வெளி ஆய்வகங்களை அமைக்க தனது பெருநிறுவன சமூகப் பொறுப்புடைமை முயற்சிகளின் கீழ் பழங்குடியினர் நல அமைச்சகத்தின் திட்டங்களுக்கு உதவுவதாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் அறிவித்துள்ளது. இதற்காக சுமார் 12 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கியுள்ளது.

இந்த முயற்சியின் மூலம், விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (ஸ்டெம்) ஆகிய துறைகளில் பழங்குடி இளைஞர்களுக்கு கல்வி இடைவெளிகளைக் குறைக்கவும் புதிய வழிகளைத் திறக்கவும் அமைச்சகம் முயற்சி செய்கிறது. இளம் வயதிலேயே விண்வெளி அறிவியலில் ஆர்வத்தை ஏற்படுத்துவதன் மூலம், பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த எதிர்கால விஞ்ஞானிகள், தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை வளர்த்தெடுப்பதற்கான அடித்தளத்தை அமைப்பதை அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டம் பழங்குடியின மாணவர்களை இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்தின் மைய நீரோட்டத்தில் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக அமைகிறது. சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் சமமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கல்வி வாய்ப்புகளை உருவாக்குவதற்கான தேசிய கல்விக் கொள்கை 2020 -இன் கட்டமைப்பின் கீழ் அரசின் பரந்த முயற்சிகளை இது பிரதிபலிக்கிறது.

ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மிசோரம், ஒடிசா, ராஜஸ்தான், தெலங்கானா, திரிபுரா, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் இந்த ஆய்வகங்கள் நிறுவப்பட உள்ளன. இந்த முயற்சியின் மூலம் 50,000-க்கும் அதிகமான பழங்குடியின மாணவர்கள் பயனடைவார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2125464

*****

TS/SMB/KR

 


(Release ID: 2125503)
Read this release in: English , Urdu , Hindi , Odia , Telugu