மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
பிரதம மந்திரி உயர்கல்வித் திட்டத்தின் கீழ் பல்துறை கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள் குறித்த இரண்டு நாள் தேசிய பயிலரங்கை டாக்டர் சுகந்தா மஜும்தார் தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
30 APR 2025 2:42PM by PIB Chennai
பிரதம மந்திரி உயர்கல்வி திட்டத்தின் கீழ், பல்துறை கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள் குறித்த இரண்டு நாள் தேசிய பயிலரங்கை புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தில் மத்திய கல்வி மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார் தொடங்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் சுகந்தா மஜும்தார், இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும், நிறுவனங்களை நவீனமயமாக்கும் மற்றும் நாட்டின் பழமையான அறிவை நவீன கண்டுபிடிப்புகளுடன் ஒருங்கிணைக்கும் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் முயற்சிகள் மூலம், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள தேவையான திறன்கள் மற்றும் அறிவுடன் இந்திய மாணவர்கள் உருவாக்கப்படுவதை தேசிய கல்விக் கொள்கை 2020 நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
64 க்கும் மேற்பட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 64 க்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள் மற்றும் மாநில உயர் கல்வி திட்ட இயக்குநர்களின் சார்பான அதிகாரிகள் ஆகியோரின் பங்கேற்புடன், தேசிய பயிலரங்கு மத்திய மற்றும் மாநில அரசு நிதியுதவியுடன் இணைந்து தேசிய கல்விக் கொள்கையின் பல்வேறு கூறுகளை எவ்வாறு சிறப்பாகப செயல்படுத்துவது என்பது குறித்த அத்தியாவசிய வழிகாட்டுதலை வழங்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். பல்துறை கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்ற அம்சத்தின்கீழ், கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டிய 44 நடவடிக்கைகளை செயல்படுத்த 35 பல்கலைக்கழகங்களுக்கு தலா ரூ .100 கோடியை அமைச்சகம் வழங்குகிறது என்றும் டாக்டர் மஜும்தார் கூறினார். ஒவ்வொரு பல்கலைக்கழகமும் புதுமை, உள்ளடக்கம் மற்றும் உலகளாவிய சிறப்பின் மையமாக மாறும் என்றும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை நனவாக்க ஒவ்வொருவரும் அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்புடன் முன்னேற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த இரண்டு நாள் கருத்தரங்கில், தேசிய கல்விக் கொள்கை அமலாக்கத்திற்கான பல்கலைகழக மானியக் குழு விதிமுறைகள் (நிலை மற்றும் சவால்கள்) குறித்து பன்னிரண்டு முக்கிய அமர்வுகள் நடைபெறுகிறது. பல்துறை கல்விக்கான தொகுப்பு மற்றும் ஒத்துழைப்பு; திறன் மற்றும் தொழில்துறை இணைப்பை ஒருங்கிணைப்பதன் மூலம் முழுமையான கல்வி; தொழில் பழகுநர் மற்றும் பணி முன் அனுபவ பயிற்சி திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் வளர்ந்து வரும் பகுதிகளில் வேலை மற்றும் படிப்புகளின் எதிர்காலம்; டிஜிட்டல் முன்முயற்சிகள்; சமத்துவம் மற்றும் உயர் கல்விக்கான அணுகல்; இந்திய அறிவு முறை; மின் ஆளுமை; ஆராய்ச்சி, புத்தாக்கம் & சர்வதேசமயமாக்கல் உயர்கல்வியில் இந்திய மொழிகளை ஊக்குவித்தல் ஆகிய அமர்வுகளில் புகழ்பெற்ற கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் நுண்ணறிவுகளை பகிர்ந்து கொள்வார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2125442
*****
(Release ID: 2125442)
TS/IR/SG/KR
(रिलीज़ आईडी: 2125466)
आगंतुक पटल : 24