பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒருங்கிணைந்த படைப்பிரிவுகளின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜே.பி.மேத்யூ ஓய்வு பெற்றார்

Posted On: 30 APR 2025 1:33PM by PIB Chennai

சுமார் 40 ஆண்டுகால சேவைக்குப் பிறகு 2025 ஏப்ரல் 30 அன்று லெப்டினன்ட் ஜெனரல் ஜே.பி.மேத்யூ ஒருங்கிணைந்த படைப்பிரிவுகளின் தலைமைத் தளபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். தனது ஓய்வு நாளில், புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். சவுத் பிளாக்கில் அவருக்கு சம்பிரதாயப்படி முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

அவர் 2023 ஏப்ரல் முதல் ஒருங்கிணைந்த பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதியாக பதவி வகித்து வந்தார். பாதுகாப்பு சைபர் முகைமை மற்றும் பாதுகாப்பு விண்வெளி முகைமை ஆகியவற்றில் லெப்டினன்ட் ஜெனரல் மேத்யூ குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார். அரசின் தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்கைப் பார்வையைப் பிரதிபலிக்கும் வகையில் இந்திய பாதுகாப்புத் தொழில்துறை மற்றும் கல்வியாளர்களுடன் வலுவான ஒத்துழைப்பை அவர் ஊக்குவித்தார். பாதுகாப்பு சேவை பணியாளர் கல்லூரி பாதுகாப்பு மேலாண்மை, இராணுவ தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் தேசிய பாதுகாப்பு அகாடமி ஆகியவற்றில் முக்கிய சீர்திருத்தங்களை வழிநடத்துவது மற்றும் பாடத்திட்டத்தை மதிப்பாய்வு செய்வது முதல் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிப்பது வரை, ஆயுதப் படைகளில் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை மேம்படுத்துவது என பல  சீர்திருத்தங்களில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

அண்டை நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பைப் பேணுவதற்கும், பிராந்திய நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், லெப்டினன்ட் ஜெனரல் மேத்யூ இந்திய ஆயுதப் படைகளை பல்வேறு அரங்குகளில் பிரதிநிதித்துவப்படுத்தினார். கூடுதலாக, ஆயுதப்படைகளின் மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரண திறன்களை மேம்படுத்துவதிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

1985 டிசம்பர் மாதத்தில் பஞ்சாப் படைப்பிரிவில் நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் 2022 ஜனவரி 09 அன்று படைப்பிரிவின் கர்னலாக ஆனார். அவரது புகழ்பெற்ற சேவைகளுக்காக, அவருக்கு பரம் விஷிஷ்ட் சேவா பதக்கம், உத்தம் யுத் சேவா பதக்கம், அதி விஷிஷ்ட் சேவா பதக்கம் மற்றும் விஷிஷ்ட் சேவா பதக்கம் ஆகியன வழங்கப்பட்டுள்ளன.

***

(Release ID: 2125415)

TS/IR/SG/KR


(Release ID: 2125456) Visitor Counter : 15