பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் மைகவ் இணைந்து சுதந்திர தின விழா-2025-ஐ ஒட்டி தேசிய அளவிலான 'அறிவுப்பாதையில் (ஞான்பத்) வடிவமைப்பு உருவாக்கல் போட்டியை' நடத்த உள்ளன.
Posted On:
30 APR 2025 1:05PM by PIB Chennai
2025 சுதந்திர தின விழாவிற்கு முன்னதாக பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் மைகவ் இணைந்து 2025, மே 01 முதல் 15 வரை தேசிய அளவிலான 'அறிவுப்பாதையில் (ஞான்பத்) வடிவமைப்புக்கான போட்டி'யை நடத்த உள்ளன. இந்தப் போட்டி, இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் மற்றும் குடிமக்களிடையே தேசபக்தி உணர்வை ஊட்டுவதையும், படைப்பாற்றல் வெளிப்பாட்டை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய மாணவர் படை மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட வேண்டிய ஒரு வடிவமைப்பை போட்டியின் பங்கேற்பாளர்கள் பொருத்தமான பின்புலத்துடன் கருத்தாக்கமாக சமர்ப்பிக்க வேண்டும். இது தில்லி செங்கோட்டையில் உள்ள அறிவுப்பாதையில் நடைபெறும் சுதந்திர தின விழா 2025-ல் காட்சிப்படுத்தப்படும். மேலும் தகவலுக்கு, https://www.mygov.in/ என்ற இணைய தளத்தைப் பார்வையிடவும்.
போட்டியின் முக்கிய அம்சங்கள்:
வெற்றிபெறும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கு தலா ரூ. 10,000/- ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
முதல் 250 பங்கேற்பாளர்கள், தலா ஒரு துணையுடன் (பாதுகாவலர்/மனைவி/உறவினர்), செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழா 2025-ஐக் காண மின்னணு அழைப்புகளைப் பெறுவார்கள்.
அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் மைகவ் மூலம் ஆன்லைன் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும்.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
- போட்டியில் பங்கேற்பவர்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
- ஒருவர் ஒரு முறை மட்டுமே பங்கேற்க முடியும்.
- மைகவ் போர்ட்டலின் தேவைக்கேற்ப, ஜேபிஜி /பிடிஎஃப் /கையால் வடிவமைக்கப்பட்ட அல்லது கணினிமயமாக்கப்பட்ட வேறு எந்த வடிவத்திலும் பதிவுகள் இருக்கலாம்.போட்டிக்கான வடிவமைப்பைத் தயாரிப்பதில் ஏதேனும் படம்/லோகோவின் குறிப்பு எடுக்கப்பட்டிருந்தால், இறுதி வடிவமைப்புடன் பங்கேற்பாளர் குறிப்பிடப்பட்ட படத்தையும் பதிவேற்ற வேண்டும்.
- போட்டியில் பங்கேற்கும் போது ஆள்மாறாட்டம், இரட்டை பங்கேற்பு போன்றவற்றை உள்ளடக்கிய எந்தவொரு நியாயமற்ற/போலியான வழிமுறைகள்/முறைகேடுகளைப் பயன்படுத்தினால் பங்கேற்பு நிராகரிக்கப்படும்.
- பதிப்புரிமை பெற்ற படத்தைப் பயன்படுத்தக்கூடாது, அது தொடர்பான உறுதிமொழியும் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு உறுதிமொழி வழங்காதது தேர்வை செல்லாததாக்கும். மேலும், போட்டியின் ஏற்பாட்டாளர்கள் அல்லது அவர்கள் சார்பாகச் செயல்படும் எந்தவொரு நிறுவனமும் இது தொடர்பான அனைத்து உரிமைகளையும் கொண்டுள்ளது.
- சுதந்திர தின விழா-2025-ன் போது ஒரு போட்டி/விநாடி வினாவிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பங்கேற்பாளர்கள் ஒரே மொபைல் எண் மற்றும் ஒரே மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்த முடியாது.
- பாதுகாப்பு அமைச்சகம் நிகழ்விற்கான மின்னணு அழைப்பிதழை மட்டுமே வெளியிடும், மேலும் சுதந்திர தின விழா-2025-ல் கலந்து கொள்வதற்கான பயணம், தங்குமிடம், உணவு போன்ற அனைத்து செலவுகளையும் தனிநபரே ஏற்க வேண்டும்.
- போட்டியை ஏற்பாடு செய்வதில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய ஊழியர்கள் போட்டியில் பங்கேற்க முடியாது.இந்தத் தகுதியின்மை அவர்களின் உடனடி குடும்ப உறுப்பினர்களுக்கும் பொருந்தும்.
- பாதுகாப்பு அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட ஒரு தேர்வுக் குழுவால் பதிவுகள் பரிசீலனை செய்யப்பட்டு அதன் அடிப்படையில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
- எந்தவொரு பங்கேற்பாளராலும் வழங்கப்படும் வடிவமைப்புகளை பாதுகாப்பு அமைச்சகம் செங்கோட்டையில் உள்ள அறிவுப்பாதை வடிவமைப்பிற்காக பகுதியளவு அல்லது முழுமையாகப் பயன்படுத்தலாம். இந்தப் போட்டியின் போது சமர்ப்பிக்கப்பட்ட வடிவமைப்புகளின் பதிப்புரிமைக்கான எந்தவொரு கோரிக்கையும் பங்கேற்பாளர்களால் எந்த நேரத்திலும் செய்யமுடியாது.
***
(Release ID: 2125411)
TS/SMB/KR
(Release ID: 2125441)
Visitor Counter : 15