ஆயுஷ்
தேசிய ஆயுஷ் இயக்கம் மாநாடு 2025: நாடு முழுவதும் பாரம்பரிய சுகாதாரச் சேவையை வலுப்படுத்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கூட்டாக ஒத்துழைத்தல்
Posted On:
29 APR 2025 6:02PM by PIB Chennai
மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகமானது தேசிய ஆயுஷ் இயக்கம் மாநாட்டை 2025 மே 1, 2 ஆகிய நாட்களில் மகாராஷ்டிராவின் லோனாவாலாவில் உள்ள கைவலிதாமில் நடத்துகிறது. இந்த இரண்டு நாள் நிகழ்வு, நாட்டில் ஆயுஷ் அடிப்படையிலான சுகாதாரப் பராமரிப்பின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான தேசிய மன்றமாக செயல்படும். ஆயுஷ் வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள், சுகாதார வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புதுமையாளர்களை இந்த மாநாடு ஒன்றிணைக்கிறது. பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளை பிரதான சுகாதாரப் பராமரிப்புடன் ஒருங்கிணைக்கும் முயற்சிகளை வலுப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மாநாட்டை மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ் தொடங்கி வைக்கிறார். ராஜஸ்தான் அரசின் துணை முதலமைச்சர் மற்றும் ஒன்பது மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் சுகாதார அமைச்சர்களும் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆயுஷ் அமைச்சக செயலாளர் திரு வைத்யா ராஜேஷ் கொடேச்சா மற்றும் பிரமுகர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். இந்த இயக்கத்தின் இயக்குநர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் புகழ்பெற்ற கல்வியாளர்கள் உள்ளிட்ட மாநில / யூனியன் பிரதேச ஆயுஷ் துறைகளின் அதிகாரிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2125229
*****
TS/IR/KPG/DL
(Release ID: 2125264)
Visitor Counter : 15