எரிசக்தி அமைச்சகம்
அணு மின் உற்பத்தி மேம்பாட்டுக்கான செயல்திட்டம் என்ற தலைப்பில் மின்சார அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக்குழுக் கூட்டம் நடைபெற்றது
Posted On:
29 APR 2025 4:10PM by PIB Chennai
மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் திரு மனோகர் லால் 2025 ஏப்ரல் 27, 28 ஆகிய நாட்களில் குஜராத்தில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார்.
இந்தப் பயணத்தின் போது, அணுமின் உற்பத்தி மேம்பாடு குறித்த மின்சார அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய அவர், முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் திரு கனு தேசாய் ஆகியோருடன் விவாதங்களை மேற்கொண்டார்.
கக்ரபார் அணுமின் திட்டத்தையும் பார்வையிட்ட மத்திய அமைச்சர் திரு. மனோகர் லால், பண்டிட் தீன்தயாள் எரிசக்தி பல்கலைக்கழகத்திற்குமா சென்றார்.
மின்சார அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுக் கூட்டம் 2025 ஏப்ரல் 28 அன்று மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு மனோகர் லால் தலைமையில் "அணு மின் உற்பத்திக்கான செயல் திட்டம் என்ற தலைப்பில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் 2070-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கரியமில வாயு உமிழ்வை அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார். மேலும் புதைபடிவ எரிபொருள் அல்லாத அடிப்படையிலான மின் உற்பத்தியின் பங்கை அதிகரிப்பது குறித்தும் குறிப்பிட்டார். உலகளாவிய எரிசக்தி தொடர்பான உமிழ்வுகளில் 40%-க்கும் அதிகமான பங்களிப்பு மின் துறையைச் சார்ந்ததாகும். புதைபடிவம் அல்லாத மற்றும் நிலையான ஆற்றல் ஆதாரமாக அணுசக்தி இருப்பதால், இந்தியாவின் நிலையான வளர்ச்சிப் பயணத்தில் இது முக்கியப் பங்கு வகிக்கும்.
குஜராத் முதலமைச்சர் திரு. பூபேந்திர படேலை காந்திநகரில் உள்ள அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் திரு மனோகர் லால் சந்தித்தார். குஜராத்தில் மின்சாரம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறைகள் தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2125171
----
TS/IR/KPG/KR
(Release ID: 2125228)
Visitor Counter : 15