திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திறன் மேம்பாட்டில் உத்திசார் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் மூலம் நட்புறவுகளை வலுப்படுத்த இந்தியாவும், எகிப்தும் பேச்சு வார்த்தை நடத்தின

Posted On: 29 APR 2025 1:15PM by PIB Chennai

மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம், எகிப்து தொழில்நுட்பக் கல்வி துணை அமைச்சர் பேராசிரியர் டாக்டர் அய்மன் பஹா எல் தின் தலைமையிலான எகிப்தின் உயர்மட்ட தூதுக்குழுவுடன் 2025 ஏப்ரல்  28 அன்று புதுதில்லியில் உள்ள கௌஷல் பவனில்  முக்கிய விவாதங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த முயற்சி வலுவடைந்து வரும் இந்தியா-எகிப்து உறவில் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கிறது.

இக்கூட்டத்தில் பேசிய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகச் செயலாளர் திரு அதுல் குமார் திவாரி, இரு நாடுகளின் மக்கள் மற்றும் நிறுவன ரீதியான தொடர்புகளை எடுத்துரைத்தார். திறன் இந்தியா இயக்கத்தின் மூலம் "உலகின் திறன் தலைநகராக" மாறுவதற்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை அவர் வலியுறுத்தினார். இதன் கீழ் ஏற்கனவே 400,000 நபர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் மற்றும் பேரளவு தரவு போன்ற மேம்பட்ட களங்களில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.  அதே நேரத்தில் 1.3 மில்லியனுக்கும் அதிகமான தொழில்முனைவோர்களை உருவாக்கி வளர்த்து வருகிறது.

உலகத் தரத்துடன் தனது தொழிற்கல்வி மற்றும் பயிற்சி சூழல் அமைப்பை சீரமைப்பதற்கான இந்தியாவின் முயற்சிகள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த திறன் இந்தியா சர்வதேச மையங்களை நிறுவுதல் ஆகியவை சர்வதேச ஒத்துழைப்புக்கான மாதிரிகளாக முன்வைக்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2125101  

----

TS/SV/KPG/KR


(Release ID: 2125124) Visitor Counter : 12