பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்பு உற்பத்திக்கான தொழில் மற்றும் தர உத்தரவாதத்தை செயல்படுத்துவது குறித்த இரண்டு நாள் பயிலரங்கம் புதுதில்லியில் நடைபெற்றது

Posted On: 28 APR 2025 3:27PM by PIB Chennai

பாதுகாப்பு உற்பத்திக்கான தொழில்கள் 4.0 & தர உத்தரவாதம் 4.0-ஐ செயல்படுத்துவது குறித்த இரண்டு நாள் பயிலரங்கம் ஏப்ரல் 24 & 25-ம் தேதிகளில் நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சகமுமா பாதுகாப்பு உற்பத்தித் துறையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்தப் பயிலரங்கு பாதுகாப்பு தர உத்தரவாத இயக்குநரகத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது. பாதுகாப்பு தொடர்பான பொதுத்துறை நிறுவனங்களில் தானியங்கி முறையை அமல்படுத்துவதற்கான அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்கும் பணி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் கற்றுக்கொள்வது  குறித்தும் விரிவான நடைமுறைகளை அறிந்து கொள்ளச் செய்வதே இந்தப் பயிலரங்கின் நோக்கமாகும்.

இந்தப் பயிலரங்கை பாதுகாப்பு அமைச்சக இணைச் செயலாளர் (நில அமைப்புகள்)  டாக்டர் கரிமா பகத் தொடங்கி வைத்தார். இதில் உரையாற்றிய அவர்,  உலகத் தரம் வாய்ந்த பாதுகாப்புச் சாதனங்களை உற்பத்தி செய்வதற்கான தொழில்கள் 4.0 திட்டத்தையும் தர நிர்ணய அளவு 4.0 திட்டத்தையும் செயல்படுத்துவதற்கு ஏதுவாக பாதுகாப்புத் தளவாட  உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது என்று கூறினார். இந்தப் பயிலரங்கில் பாதுகாப்பு தர உத்தரவாத இயக்குநரகத்தின் தலைமை இயக்குநர் திரு என்.  மனோகரன், பேசுகையில் 2025 மே 08-ம் தேதி  தேசிய அளவிலான பாதுகாப்பு தர மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்த மாநாட்டின் போது தொழில்கள் 4.0 & தர உத்தரவாதம் 4.0 திட்டங்களை செயல்படுத்துவது குறித்த ஆவணம் வெளியிடப்படும் என்றும் இதில் துறை சார்ந்த நிபுணர்களின் குழு விவாதம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், செயலாளர் (பாதுகாப்பு உற்பத்தி) திரு சஞ்சீவ் குமார் ஆகியோரின் அறிவுறுத்தல்களின்படி, 'சீர்திருத்த ஆண்டு' முன்முயற்சியின் கீழ் இந்தப் பயிலரங்கு நடத்தப்பட்டது.

***

(Release ID: 2124847)

TS/SV/KPG/KR


(Release ID: 2124893) Visitor Counter : 14