பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் தத்தெடுப்பு நடைமுறை

Posted On: 25 APR 2025 3:20PM by PIB Chennai

பல ஆண்டுகளாக, இந்தியாவில் சட்டப்பூர்வ தத்தெடுப்பு அதிகரித்துள்ளது. ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம்  வழங்க குடும்பங்கள் முன்வருகின்றன. 2024-25 நிதியாண்டில், இந்தியாவில் 4,515 தத்தெடுப்புகள் நடந்துள்ளனத - இது கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில் மிக அதிகம். இவற்றில், 4,155 உள்நாட்டு தத்தெடுப்புகளாகும். இது சமூக அணுகுமுறைகளில் ஒரு சக்திவாய்ந்த மாற்றத்தைக் குறிக்கிறது. இந்தியக் குடும்பங்கள் தத்தெடுப்பது இனி அரிதான செயல் அல்ல. இது திறந்த மனதுடன் மற்றும் தழுவத் துடிக்கும் கரங்களுடன் செய்யப்பட்ட தேர்வாக மாறி வருகிறது.

இந்த மாற்றத்தை இயக்குவது மத்திய தத்தெடுப்பு வள ஆணையம் ஆகும். எந்தவொரு குழந்தையும் பின்தங்கி விடக்கூடாது என்பதை உறுதி செய்யும்  நோக்கத்துடன் இந்த ஆணையம் செயல்படுகிறது.ஸபெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த சட்டப்பூர்வ அமைப்பானது ஆதரவற்ற குழந்தைகளைப் பாதுகாக்க தத்தெடுப்பைச் சட்டப்பூர்வமாகவும் நெறிமுறையாகவும் மேற்கொள்ள வேண்டும் என்பதை உறுதி செய்கிறது.

இது இந்திய குழந்தைகளை தத்தெடுப்பதற்கான ஒருங்கிணைப்பு அமைப்பாகச் செயல்படுகிறது மற்றும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தத்தெடுத்தலை கண்காணித்தல் மற்றும் முறைப்படுத்தும் பணியையும் மேற்கொள்கிறது. 2003- ஆம் ஆண்டில் மத்திய அரசால் உறுதிப்படுத்தப்பட்ட நாடுகளுக்கிடையேயான தத்தெடுப்பு தொடர்பான ஹேக் மாநாடு, 1993- இன் விதிகளின்படி, நாடுகளுக்கு இடையிலான தத்தெடுப்பைக் கையாள்வதற்கான அதிகாரம் பெற்ற மத்திய அமைப்பாக இது நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் முதன்மையாக அனாதை, கைவிடப்பட்ட மற்றும் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளை அதன் தொடர்புடைய / அங்கீகரிக்கப்பட்ட தத்தெடுப்பு நிறுவனங்கள் மூலம் தத்தெடுப்பதைக் கையாள்கிறது. சட்டப்பூர்வ தத்தெடுப்புகளை ஊக்குவிக்க கள நடவடிக்கைகள், பயிற்சி அமர்வுகள் மற்றும் சமூக ஊடகப் பிரச்சாரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தத்தெடுப்பு என்பது சட்ட ஒப்பந்தங்களைப் பற்றியது மட்டுமல்ல, பெற்றோரும் குழந்தையும் ஒன்றாக சேர்ந்து எடுக்கும் ஒரு உணர்ச்சிபூர்வமான பயணமாக இருப்பதால், செயல்முறை இன்னும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

பல ஆண்டுகளாக, தத்தெடுப்பதில் இருக்கும் மிகப்பெரிய தடைகளில் ஒன்று, தேவையை எதிர்பார்க்கும் குழந்தைகளுக்கும் தத்தெடுக்க விரும்பும் பெற்றோருக்கும் இடையிலான இடைவெளியாகும். ஆனால் 2023-24 ஒரு திருப்புமுனையைக் குறித்தது.  8,500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு தத்தெடுப்பு மையத்தில்  சேர்க்கப்பட்டனர்.

மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தின் கட்டமைப்பில்  245 புதிய முகமைகள் சேர்க்கப்பட்டன, இது தத்தெடுப்பை முன்னெப்போதையும் விட அணுகக்கூடியதாக ஆக்கியது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2124267

 

***

(Release ID: 2124267)
TS/PKV/RR/KR


(Release ID: 2124320) Visitor Counter : 19
Read this release in: English , Urdu , Hindi , Gujarati