தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
புதுப்பிக்கப்பட்ட படிவம் 13 செயல்பாட்டின் மூலம் கணக்கு மாற்றல் கோரல் நடைமுறையை இபிஎஃப்ஓ எளிமையாக்கியுள்ளது; 1.25 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் பயனடைவார்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
25 APR 2025 2:00PM by PIB Chennai
புதுப்பிக்கப்பட்ட படிவம் 13 செயல்பாட்டின் மூலம் கணக்கு மாற்றல் கோரல் நடைமுறையை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) எளிமையாக்கியுள்ளது. இதன்படி, மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் ஏற்கனவே கணக்கு வைக்கப்பட்டுள்ள அலுவலகத்தின் கணக்குகள் ஊழியர் மாற்றப்பட்ட அலுவலகத்திற்கு தாமாகவே உடனடியாக மாற்றம் செய்யப்பட்டுவிடும். இது இபிஎஃப்ஓ உறுப்பினர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வரி செலுத்தக்கூடிய வருங்கால வைப்பு நிதி வட்டிக்கான டிடிஎஸ் கணக்கை துல்லியமாக் காட்டுவதற்கு திருத்தியமைக்கப்பட்ட படிவச் செயல்பாட்டில் வரிக்கு உரியது, வரி செலுத்த வேண்டாதது என பிரித்தறிகின்ற அம்சம் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ரூ.90 ஆயிரம் கோடி அளவுக்கு மாற்றம் செய்யப்படுகின்ற 1.25 கோடிக்கும் அதிகமான இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2124244
***
TS/SMB/AG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2124288)
வருகையாளர் எண்ணிக்கை : 62