கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

'வளர்ச்சி மற்றும் பாரம்பரியம்' என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியின் குறிக்கோளைக் குறிப்பிட்டு, பாரம்பரிய தளங்களில் பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்த மத்திய கலாச்சார அமைச்சர் வலியுறுத்துகிறார்

Posted On: 23 APR 2025 6:40PM by PIB Chennai

மத்திய தொல்லியல் ஆலோசனைக் குழுவின் 38-வது கூட்டம் தில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடந்தது. இந்தியாவின் வளமான தொல்லியல் பாரம்பரிய தளங்களைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் நடத்தப்பட்ட இந்தக்  கூட்டம் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கிறது. கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தனது முக்கிய உரையில், தொல்லியல், அகழ்வாராய்ச்சி, கண்டுபிடிப்புகள் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஆற்றல்மிக்க, உள்ளடக்கிய மற்றும் முன்னோக்கிய பாதையை முன்வைத்தார்.

 

நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதில் இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் (ஏ.எஸ்.ஐ) முக்கிய பங்கை அவர் வலியுறுத்தினார். அண்மையில் அதிகரித்து வரும் அகழ்வாராய்ச்சி மற்றும் ஆய்வுப் பணிகளைப் பாராட்டிய அமைச்சர், அகழ்வாராய்ச்சி மற்றும் ஆய்வுத் திட்டங்களை மேலும் விரிவானதாகவும், உள்ளடக்கியதாகவும், தொலைநோக்குப் பார்வை கொண்டதாகவும் மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், இந்திய தொல்லியல் துறையின் நீருக்கடியில் தொல்லியல் பிரிவை (யுஏடபிள்யூ) மறுசீரமைப்பதை அவர் கோடிட்டுக் காட்டினார், இதன் கீழ் துவாரகாவில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. "பாரம்பரியத்துடன் வளர்ச்சி" என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியின் குறிக்கோளை மீண்டும் வலியுறுத்திய அவர், பாரம்பரிய இடங்களில் பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

 

பழங்கால பொருட்களை வெற்றிகரமாக இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பியதையும் அமைச்சர் எடுத்துரைத்தார், இது நாட்டின் கலாச்சார அடையாளத்தை மீட்டெடுப்பதில் ஒரு பெரிய சாதனையாகக் குறிப்பிட்டார். மேலும், இந்தியாவிற்குள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் உள்ள வரலாற்று தளங்களைப் பாதுகாப்பதிலும் ஏ.எஸ்.ஐ.யின் தீவிர பங்கை அவர் எடுத்துரைத்தார், இது உலகளாவிய கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2123907

 

***

 

(Release ID: 2123907)


RB/DL


(Release ID: 2123965) Visitor Counter : 17
Read this release in: English , Urdu , Marathi , Hindi