குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ஊட்டியில் துணைவேந்தர்கள் வருடாந்திர மாநாட்டுக்கு குடியரசுத் துணைத்தலைவர் தலைமை வகிக்கிறார்
ஊட்டியில் உள்ள முத்தநாடு மந்து தோடர் கோவிலுக்கு குடியரசுத் துணைத் தலைவர் செல்கிறார்
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் கூட்டத்தில் குடியரசுத் துணைத் தலைவர் உரையாற்றுகிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
23 APR 2025 3:54PM by PIB Chennai
குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், டாக்டர் சுதேஷ் தன்கர் ஆகியோர் மூன்று நாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வரவுள்ளனர். இந்தப் பயணத்தின்போது, 2025 ஏப்ரல் 25 அன்று ஊட்டியில் நடைபெறும் துணைவேந்தர்களின் வருடாந்திர மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அக்கூட்டத்திற்கு தலைமை வகிக்க உள்ளார்.
2025 ஏப்ரல் 26 அன்று, திரு ஜக்தீப் தன்கர் ஊட்டியில் உள்ள முத்தநாடு மந்து தோடர் கோயிலுக்குச் செல்ல உள்ளார்.
அதைத் தொடர்ந்து, 27.04.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே அவர் உரையாற்றுகிறார்.
***
(Release ID: 2123787)
TS/PLM/RR/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2123861)
வருகையாளர் எண்ணிக்கை : 71