பாதுகாப்பு அமைச்சகம்
வெடிமருந்து மற்றும் தளவாடங்களை ஏற்றிச் செல்லும் 10-வது ஏவுகணைப் படகு, எல்எஸ்ஏஎம் 24 (யார்டு 134) பணியில் ஈடுபடுத்தப்பட்டது
Posted On:
23 APR 2025 9:00AM by PIB Chennai
வெடிமருந்து மற்றும் தளவாடங்களை ஏற்றிச் செல்லும் 10-வது ஏவுகணைப் படகு, எல்எஸ்ஏஎம் 24 (யார்டு 134) பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
10-வது நீருக்கடியில் இருந்து செலுத்தக்கூடிய ஏவுகணையுடன் கூடிய படகு ஏப்ரல் 22-ம் தேதி மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இந்த விழாவிற்கு தலைமை விருந்தினராக கமாண்டர் ஏ.கே.கே.ரெட்டி கலந்துகொண்டார்.
தானேவில் உள்ள சூர்யதீப்தா ப்ராஜெக்ட்ஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் வெடிமருந்துகள் மற்றும் நீருக்கடியிலிருந்து செலுத்தக்கூடிய ஏவுகணை வசதியுடன் கூடிய 11 படகுகளை தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தம் 2021-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி முடிவு செய்யப்பட்டது. இந்த கப்பல் கட்டுமான தளத்தில் இந்திய கப்பல் வடிவமைப்பு நிறுவனத்துடன் இணைந்து இந்த ரக படகுகள் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டன. பின்னர் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தில் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டு கடலில் பயன்படுத்தக் கூடிய தகுதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் படகுகள் இந்திய கப்பல் பதிவேட்டின் (ஐஆர்எஸ்) தொடர்புடைய கடற்படை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு ஏற்ப கட்டப்பட்டுள்ளன. இந்தப் படகுகள் மத்திய அரசின் "இந்தியாவில் உற்பத்தி செய்வோம்" மற்றும் "தற்சார்பு இந்தியா" போன்ற முன்னோடி திட்டங்களின் முன்முயற்சியாக அமைந்துள்ளது. ஒன்பது நீருக்கடியில் இருந்து செலுத்தக்கூடிய ஏவுகணையுடன் கூடிய படகுகள் ஏற்கனவே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் கப்பல் கட்டும் தளத்திற்கு நான்கு சுல்லேஜ் படகுகளை நிர்மாணித்து இந்திய கடற்படைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தமும் வழங்கப்பட்டுள்ளது, இந்த நடவடிக்கையானது குறு, சிறு நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிப்பதில் இந்திய கடற்படையின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2123750
***
TS/SV/RJ/KR
(Release ID: 2123804)
Visitor Counter : 19