விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

துவரம் பருப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் துவரம்பருப்பு கொள்முதல் தொடர்கிறது - விலை ஆதரவுத் திட்டம் யில் கொள்முதல் செய்ய அரசு உறுதி

Posted On: 23 APR 2025 2:15PM by PIB Chennai

பருப்பு வகைகளின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதில் பங்களிக்கும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்கும், இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும், 2024-25 கொள்முதல் ஆண்டில் உற்பத்தி செய்யும் அளவில் 100 சதவீதத்துக்கும்  விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்புமசூர் ஆகியவற்றை கொள்முதல் செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டில் பருப்பு வகைகளில் தன்னிறைவை அடைவதற்காக, 2028-29 வரையிலான அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு உற்பத்தியில் 100% துவரம் பருப்பு (அர்ஹர்), உளுத்தம் பருப்பு, மசூர் ஆகியவற்றை கொள்முதல் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஒருங்கிணைப்பு முகமைகளான தேசிய வேளாண் கூட்டுறவு இணையம் மற்றும் தேசிய கூட்டுறவு நிதியம் மூலம் கொள்முதல் மேற்கொள்ளப்படும் என்று 2025 பட்ஜெட்டில் அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானாஉத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 2024-25 கரீப் பருவத்தில் விலை ஆதரவு  திட்டத்தின் கீழ் மொத்தம் 13.22 லட்சம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்ய மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் ஒப்புதல் அளித்தார். விவசாயிகளின் நலன் கருதி ஆந்திராவில் கொள்முதல் காலத்தை 90 நாட்கள் தாண்டி அடுத்த மாதம் 22 வரை 30 நாட்கள் நீட்டிக்கவும் அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தேசிய வேளாண் கூட்டுறவு இணையம் மற்றும் தேசிய கூட்டுறவு நிதியம் மூலமாக குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலங்களில் மொத்தம் 2,56,517 விவசாயிகள் பயனடையும் வகையில் 3.92  லட்சம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு இம்மாதம் 22-ம் தேதி வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. முன் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளிடமிருந்து தேசிய கூட்டுறவு கூட்டுறவு இணையத்தின் இ-சம்ரிதி தளம் மற்றும் தேசிய கூட்டுறவு நிதியத்தின் இசம்யுக்தி தளம் மூலமாகவும் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்படுகிறது. தேசிய வேளாண் கூட்டுறவு கூட்டுறவு இணையம் மற்றும் தேசிய கூட்டுறவு நிதியம் போன்ற மத்திய அமைப்புகள் மூலம் விவசாயிகளால் வழங்கப்படும் துவரம் பருப்பை குறைந்தபட்ச ஆதரவு விலையில் 100 சதவீதம் கொள்முதல் செய்ய மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. 

***

(Release ID: 2123761)
TS/PLM/RR/KR


(Release ID: 2123801) Visitor Counter : 34