சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசின் சுகாதார திட்டத்தின் கீழ் (சி.ஜி.ஹெச்.எஸ்) டிஜிட்டல் தளத்திற்கான மென்பொருள் அறிமுகம்

இடுகை இடப்பட்ட நாள்: 23 APR 2025 11:41AM by PIB Chennai

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் முதன்மைத் திட்டமான மத்திய அரசின் சுகாதாரத் திட்டம், எதிர்கால தலைமுறையினருக்கான சுகாதார மேலாண்மைத் தகவல் அமைப்பின் செயல்பாடுகளுக்காக டிஜிட்டல் தளத்தை மேம்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் சுகாதார திட்டத்திற்கான இணையதள சேவைகள் வரும் ஏப்ரல் 28-ம் தேதி முதல் டைமுறைக்கு  வருகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள சுகாதார திட்டத்திற்கான மென்பொருளின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில், புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இது நவீன தகவல் தொழில்நுட்ப தரநிலைகள், சைபர் பாதுகாப்பு கட்டமைப்புகள் மற்றும் பயனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையிலான அம்சங்கள், புதுப்பிக்கப்பட்ட சுகாதார மேலாண்மை தரவு சேவைகள் விரைவாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் வழங்க வழி வகை செய்கிறது.

 

தடையில்லாமல் இந்த தொழில்நுட்ப மாற்றத்தை  செயல்படுத்தும் பொருட்டு சுகாதார மையங்கள் உட்பட அனைத்து மத்திய அரசு சுகாதார சேவைகளும்(சி.ஜி.ஹெச்.எஸ். சேவைகள்)ஏப்ரல் 26-ம் தேதி அன்று (சனிக்கிழமை) ஒரு நாள் மட்டும்  செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2123696

***

TS/SV/RJ/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2123744) வருகையாளர் எண்ணிக்கை : 174
இந்த வெளியீட்டை படிக்க: Manipuri , Gujarati , Malayalam , Urdu , Marathi , हिन्दी , Bengali