உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
இந்தியாவின் விமானப் போக்குவரத்து புரட்சி
Posted On:
22 APR 2025 6:19PM by PIB Chennai
"இந்தியாவின் பொருளாதாரத்தில் விரைவாக வளர்ந்து வரும் துறைகளில், விமானப் போக்குவரத்துத் துறையும் ஒன்றாகும். இந்தத் துறையானது மக்கள், கலாச்சாரம் மற்றும் வளத்தை இணைக்கிறது. 4 பில்லியன் மக்கள், வேகமாக வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கம் மற்றும் அதன் விளைவாக தேவை அதிகரிப்பு ஆகியன இத் துறையின் வளர்ச்சிக்கு ஒரு குறிப்பிடத்தக்க உந்து சக்தியாகும்.
இந்தியாவின் உள்நாட்டு விமானப் பயணிகள் போக்குவரத்து 2024- ம் ஆண்டில் ஒரே நாளில் 5 லட்சம் பயணிகளைக் கடந்து வரலாற்று மைல்கல்லை எட்டியது.
உடான் திட்டத்தின் 9-வது ஆண்டு தொடங்குகிறது. உடான் திட்டத்தின் கீழ் 619 வழித்தடங்கள் மற்றும் 88 விமான நிலையங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. மேலும் இத்திட்டம் 120 இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது.
கொல்கத்தா மற்றும் சென்னை விமான நிலையங்களில் பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில், தரமான உணவை வழங்கும் உடான் பயணிகள் கஃபேக்கள் தொடங்கப்பட்டுள்ளன.
விரைவான விமான உள்கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்ந்தது. பசுமை விமான நிலையங்களைச் செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் நாடு முழுவதும் தற்போதுள்ள வசதிகளை மேம்படுத்துதல்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் மாற்றத்தக்க வளர்ச்சி மற்றும் புதுமையின் சகாப்தத்தை உருவாக்கியுள்ளது.
இந்திய வான்வழிச் சட்டம் 2024
இந்த சட்டம் 2024-ல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு 2025 ஜனவரி 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. காலனித்துவ கால விமானச் சட்டம், 1934-ஐ மீண்டும் இயற்றி புதுப்பிப்பதன் மூலம் இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்குவதில் இது ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையைக் குறிக்கிறது.
புதிய முனைய திறனுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது: வாரணாசி, ஆக்ரா, தர்பங்கா மற்றும் பாக்டோக்ரா போன்ற முக்கிய இடங்களில் புதிய முனையங்களுக்கான அடித்தளங்களை அமைப்பது உட்பட குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு மேம்பாடு நடந்து வருகிறது.
பசுமை விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்தன. 2014-ம் ஆண்டு முதல், கொள்கை அளவில் அங்கீகரிக்கப்பட்ட 21 விமான நிலையங்களில் 12 விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இவற்றில் துர்காபூர், ஷீரடி, கண்ணூர், பாக்யோங், கலபுர்கி, ஓர்வகல் (கர்னூல்), சிந்துதுர்க், குஷிநகர், இட்டாநகர் (ஹோலோங்கி), மோபா, சிவமோகா மற்றும் ராஜ்கோட் (ஹிராசர்) ஆகியவை அடங்கும். மேலும், நொய்டா (ஜேவர்) மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையங்களின் வளர்ச்சி வேகமாக முன்னேறி வருகிறது. 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் செயல்பாட்டை இலக்காகக் கொண்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 50 விமான நிலையங்களை மேம்படுத்தவும், அடுத்த 10 ஆண்டுகளில் 120 புதிய இடங்களை இணைக்கவும் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2123537
------
TS/IR/KPG/DL
(Release ID: 2123626)
Visitor Counter : 11