திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து நாட்டில் ஆறு மாநிலங்களில் உள்ள மகளிர் கல்லூரிகளில் 30 திறன் மேம்பாட்டு மையங்களை நிறுவுவதன் மூலம் மகளிருக்கான செயற்கை நுண்ணறிவு வேலைவாய்ப்புகளைத் தொடங்குகிறது

Posted On: 22 APR 2025 5:33PM by PIB Chennai

திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவை மகளிருக்கான செயற்கை நுண்ணறிவு வேலைவாய்ப்பைத் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டுள்ளன. இது உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள பெண்களுக்கு செயற்கை நுண்ணறிவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த உத்திசார் ஒத்துழைப்பு, தொழில்துறையுடன் இணைந்த செயற்கை நுண்ணறிவு திறன்களுடன் பெண்களை ஒருங்கிணைப்பதன் மூலம் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் பாலின இடைவெளியைக் குறைக்க முயற்சிக்கிறது. இது டிஜிட்டல் பொருளாதாரத்தில் உரிய முறையில்  பங்கேற்கவும், நாட்டின் கண்டுபிடிப்பு ரீதியிலான வளர்ச்சிக்கான செயல்பாட்டில்  பங்களிப்பவர்களாக மாறவும் உதவுகிறது.

இந்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, மைக்ரோசாப்ட் பெண்களுக்கான செயற்கை நுண்ணறிவு திறன் மற்றும் கண்டுபிடிப்பு கட்டமைப்பின் கீழ் 240 மணிநேர பயிற்சி பாடத்திட்டத்தை  வழங்கும். இது தொழில்துறை தரநிலைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி கவுன்சிலுடன் கலந்தாலோசித்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டாண்மை குறித்து பேசிய மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு (தனி பொறுப்பு), கல்வி அமைச்சக இணையமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி, "உள்ளடக்கிய மற்றும் எதிர்காலத்திற்கு தயாராக உள்ள பணியாளர்களை வடிவமைக்க அரசும் தொழில்துறையும் எவ்வாறு ஒன்றிணைய முடியும் என்பதற்கு இந்த முயற்சி எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்டார். மைக்ரோசாப்ட் உடனான தங்கள் கூட்டாண்மை செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில் பெண்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டுவதாகத் தெரிவித்தார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2123510  

------

TS/IR/KPG/DL


(Release ID: 2123556) Visitor Counter : 10