சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
ஹஜ் – 2025 அயல் பணியாளர்களுக்கான அறிமுகம் மற்றும் பயிற்சித் திட்டத்தை மத்திய சிறுபான்மையினர் நலன் இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன் தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
22 APR 2025 4:47PM by PIB Chennai
ஹஜ் 2025 அயல் பணியாளர்களுக்கான இரண்டு நாள் (ஏப்ரல் 22-23) அறிமுகம் மற்றும் பயிற்சித் திட்டத்தை மத்திய சிறுபான்மையினர் நலன் இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன் தொடங்கி வைத்தார்.
சிறுபான்மையினர் நலன் அமைச்சகச் செயலாளர் டாக்டர் சந்திரசேகர் குமார், இணைச் செயலாளர் திரு சிபிஎஸ் பக்ஷி ஆகியோர் ஹஜ் பயண அயல் பணியாளர்களை வரவேற்று 2025 ஹஜ் பயணத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டுகோள் விடுத்தனர்.
இந்தப் புனிதமான பணிக்கு நிர்வாக மற்றும் மருத்துவ ஊழியர்கள் உட்பட மொத்தம் 620 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு நாள் அமர்வு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக மற்றும் மருத்துவ பணியாளர்களின் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சியை நோக்கமாகக் கொண்டுள்ளது.
-----
(Release ID 2123473)
TS/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2123516)
आगंतुक पटल : 58