மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

குடிமைப் பணித் தேர்வு 2024 இறுதி முடிவுகளை மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது

प्रविष्टि तिथि: 22 APR 2025 2:25PM by PIB Chennai

2024 செப்டம்பரில் மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குடிமைப் பணித் தேர்வு, 2024-ன் எழுத்துத் தேர்வு மற்றும் 2025 ஜனவரி - ஏப்ரலில் நடைபெற்ற ஆளுமைத் தேர்வின்  அடிப்படையில், நியமனத்திற்குப் பரிந்துரைக்கப்பட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

(i) இந்திய ஆட்சிப் பணி;

(ii) இந்திய வெளியுறவுப் பணி;

(iii) இந்திய காவல் பணி; மற்றும்

(iv) மத்திய அரசுப் பணிகள், குரூப் 'ஏ' மற்றும் குரூப் 'பி' பணிகளுக்கு அவர்கள்  தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தம் 1009 பேர் நியமனத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்

இவர்களில் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் 335 பேரும், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள்  109  பேரும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 318 பேரும், எஸ்சி பிரிவினர் 160 பேரும் எஸ்டி பிரிவினர் 87 பேரும்  அடங்குவர்.

இதில் இந்திய ஆட்சிப்பணிக்கு பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் 73 பேரும், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள்  18 பேரும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 52 பேரும்,  எஸ்சி பிரிவினர் 24 பேரும்,   எஸ்டி பிரிவினர் 13 பேரும் என மொத்தம் 180 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்திய வெளியுறவுப்பணிக்கு பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் 23 பேரும், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் 5 பேரும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 13 பேரும்,  எஸ்சி பிரிவினர் 9 பேரும்,   எஸ்டி பிரிவினர் 5 பேரும் என மொத்தம் 55 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்தியக் காவல் பணிக்கு பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் 60 பேரும், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள்  14 பேரும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 41 பேரும்,  எஸ்சி பிரிவினர் 22 பேரும்,   எஸ்டி பிரிவினர் 10 பேரும் என மொத்தம் 147 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மத்திய குடிமைப் பணி தேர்வாணைய வளாகத்தில் தேர்வு அறை அருகே உதவி மையம் உள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வுகள்  தொடர்பான எந்தத் தகவலையும்  விளக்கங்களையும் வேலை நாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை  17:00 மணி வரை நேரிலோ அல்லது தொலைபேசி எண்கள் 23385271  23381125  23098543 மூலமாகவோ பெறலாம். தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி இணையதளத்திலும் அதாவது http://www.upsc.gov.in-ல்  தெரிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியான நாளிலிருந்து 15 நாட்களுக்குள் மதிப்பெண்கள் இணையதளத்தில் இடம் பெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2123422  

------

TS/IR/KPG/KR


(रिलीज़ आईडी: 2123441) आगंतुक पटल : 96
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Nepali , Bengali , Manipuri