பிரதமர் அலுவலகம்
யமுனை நதியைத் தூய்மைப்படுத்திப் புத்துயிர் அளிப்பது குறித்த கூட்டத்திற்குப் பிரதமர் தலைமை வகித்தார்
प्रविष्टि तिथि:
17 APR 2025 10:51PM by PIB Chennai
யமுனை நதியை தூய்மைப்படுத்துதல், புத்துயிர் பெறச் செய்வது, தில்லியில் நிலவும் குடிநீர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது ஆகியவை குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன், தில்லி மக்களின் 'வாழ்க்கையை எளிதாக்குவதை' உறுதி செய்ய தில்லி அரசுடன் மத்திய அரசு நெருக்கமாக பணியாற்றும் என்று பிரதமர் உறுதியளித்தார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"யமுனையை சுத்தம் செய்வது, புத்துயிர் அளிப்பது, தில்லியின் குடிநீர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது ஆகியவை குறித்த ஒரு கூட்டத்திற்கு தலைமை வகித்தேன். உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் தில்லியின் எனது சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையை எளிதாக்குவதை உறுதி செய்ய தில்லி அரசுடன் மத்திய அரசு நெருக்கமாகப் பணியாற்றும்."
******
(Release ID: 2122588)
PLM/SG
(रिलीज़ आईडी: 2123014)
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam