குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்குக் குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து
Posted On:
19 APR 2025 6:09PM by PIB Chennai
இயேசு பிரான் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜகதீப் தங்கர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
"இந்த ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையொட்டி, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும், இந்த புனிதமான நாளைக் கொண்டாடும் நமது கிறிஸ்தவ சமூகங்களுக்கு தனிச்சிறப்புடனும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈஸ்டர் பண்டிகை இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்ததன் மூலம் நம்பிக்கையையும் புதிய ஆற்றலையும் குறிக்கிறது. இரக்கம், மன்னிப்பு, சேவை ஆகிய அவரது எக்காலத்துக்கும் பொருந்தும் போதனைகள் ஒரு இணக்கமான சமூகத்தை உருவாக்குவதை நோக்கி நம்மை வழிநடத்துகின்றன.
நலிவடைந்தோரின் நலனுக்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் புதுப்பிக்கவும், இயேசு கிறிஸ்துவின் நிபந்தனையற்ற அன்பு தொடர்பன போதனையைப் பின்பற்றவும், இந்த புனித நாள் நம் அனைவரையும் ஊக்குவிக்கட்டும். அமைதியும் புதுப்பித்தலும் நமது தேசத்தின் வீடுகளையும் சமூகங்களையும் நிரப்பட்டும்."
*****
(Release ID: 2122923)
PLM/SG
(Release ID: 2122932)
Visitor Counter : 27