குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஈஸ்டர் பண்டிகையையொட்டி குடியரசுத்தலைவரின் வாழ்த்துகள்

Posted On: 19 APR 2025 3:45PM by PIB Chennai

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடிமக்களுக்கும் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள செய்தியில், புனிதமான ஈஸ்டர் பண்டிகை நாளில், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் அனைத்து இந்திய குடிமக்களுக்கும், குறிப்பாக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் கிறிஸ்தவ சமூகத்திற்கும் எனது வாழ்த்துகளையும் நல்விருப்பங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவுகூரும் புனித ஈஸ்டர் பண்டிகை, தன்னலமற்ற அன்பு மற்றும் சேவையின் செய்தியை வெளிப்படுத்துகிறது. இயேசு கிறிஸ்துவின் தியாகம், துறவு மற்றும் மன்னிப்பின் மதிப்பை நமக்குக் கற்பிக்கிறது. அவரது வாழ்க்கை மனிதகுலத்தை உண்மை, நீதி மற்றும் இரக்கத்தின் பாதையைப் பின்பற்றத் தூண்டுகிறது.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில், அவரது வாழ்க்கை விழுமியங்களை ஏற்றுக்கொண்டு, சமூகத்தில் அமைதியையும் செழிப்பையும் வளர்ப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

*****

(Release ID: 2122885)

SMB/SG

 


(Release ID: 2122902) Visitor Counter : 56