பாதுகாப்பு அமைச்சகம்
முப்படைகளின் எதிர்கால போர்ப்பயிற்சியின் இரண்டாவது பதிப்பை புதுதில்லியில் உள்ள ஒருங்கிணைந்த பாதுகாப்பு படையினர் தலைமையகம் நடத்தவுள்ளது
Posted On:
19 APR 2025 10:45AM by PIB Chennai
முப்படைகளின் எதிர்கால போர்ப்பயிற்சியின் இரண்டாவது பதிப்பு, புது தில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் 2025, ஏப்ரல் 21 முதல் மே 09 வரை நடைபெறும். தலைமையக ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்களின் கீழ் நடத்தப்படும் இந்தப் பாடமுறை முப்படையினர், சிந்தனையாளர்கள், போர்ப் பயிற்சி மையம் மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது.
செப்டம்பர் 2024-ல் நடத்தப்பட்ட முதல் பாடத்திட்டத்தின் வெற்றியை மேலும் நன்கு கட்டியெழுப்ப, இந்த விரிவாக்கப்பட்ட மூன்றுவார பாடத்திட்டம் நடைபெறுகிறது. நவீன யுத்தத்தின் சிக்கலான சவால்களுக்கு அதிகாரிகளைத் தயார்படுத்துவதற்கான பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி அனில் சௌஹானின் பார்வையை இது தொடர்கிறது .
இந்தப் பதிப்பில் சிறப்புப் பாடங்கள் மற்றும் ராணுவ நடவடிக்கைகளில் களம் சார்ந்த போர் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய பாடத்திட்டம் உள்ளது. சிந்தனை, கருத்துக்கள், கோட்பாடுகள், உத்திகள், நுட்பங்கள், நடைமுறைகள் ஆகியவற்றை மறுபரிசீலனை செய்வது அவசியமாகும். இது உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் திறன்களுடன் செயல்பாட்டு முன்னுரிமைகளை சீரமைக்கும். நவீன மற்றும் எதிர்கால போர் முறையின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய சுதந்திரமான விவாதத்தை முன்னெடுக்கும்.
பயிற்சியில் பங்கேற்பவர்களாக மேஜர் ஜெனரல்கள் முதல் மேஜர்கள் வரையும் பிற சேவைகளைச் சேர்ந்த அவர்களுக்கு இணையான அதிகாரிகளும், டிஆர்டிஓ உட்பட பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பிற துறைகளின் பிரதிநிதிகளும், ஸ்டார்ட்-அப்கள், எம்எஸ்எம்இக்கள் மற்றும் தனியார் தொழில்துறையை உள்ளடக்கிய பாதுகாப்புத் துறையினரும் இருப்பார்கள்.
இந்த இரண்டாம் பதிப்பு, ஆயுதப் படைகளை 'எதிர்காலத்திற்கு தயார்' செய்யும் பெரிய பணியைத் தொடர்கிறது. இது முப்படைகளுக்கு இடையே கூட்டு மற்றும் ஒருங்கிணைப்பை வளர்ப்பதுடன், நவீன போரின் சிக்கலான களத்தை வழிநடத்தும் திறன் கொண்ட ராணுவத் தலைவர்களை உருவாக்குகிறது.
****
(Release ID: 2122831)
SMB/SG
(Release ID: 2122842)
Visitor Counter : 55