கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சாகித்ய அகாடமி ஏற்பாடு செய்த 'தலித் சேத்னா' நிகழ்ச்சி

Posted On: 16 APR 2025 1:08PM by PIB Chennai

டாக்டர்  பாபாசாகேப்  அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு சாகித்ய அகாடமி ஏற்பாடு செய்திருந்த 'தலித் சேத்னா' நிகழ்ச்சியில் ஆறு புகழ்பெற்ற எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை வழங்கினர். மகேந்திர சிங் பெனிவால், மம்தா ஜெயந்த், நாமதேவர்,  நீலம் ஆகியோர் தங்களது கவிதைகளை வாசித்தனர். பூரன் சிங், தேக்சந்த் ஆகியோர் சிறுகதைகளை வாசித்தனர். அவர்களது படைப்புகளில்  டாக்டர் அம்பேத்கரின் அடிப்படை போதனைகள் மற்றும் அவரது தொலைநோக்குப் பார்வைகள் ஆகியவற்றை எடுத்துரைக்கும் வகையில் அமைந்திருந்தன. இது போன்ற நடவடிக்கைகள் பாகுபாடில்லாத சமுதாயத்தை உருவாக்க உதவும். முதலாவதாக, மம்தா ஜெயந்த் தனது ஐந்து கவிதைகளை "சபி நே சுவா தா", "ஜீவ் இமரத்தேன்", "ஈஸ்வர்", "நஹி சாஹியே" மற்றும் "பஹேலியன் கே நாம்" ஆகிய தலைப்புகளில் வாசித்தார். டாக்டர் அம்பேத்கரின் கனவுகள் தற்போதைய நிலையைப் பிரதிபலிக்கும் வகையில் "பாபா பீம்", "காடிவான்", "குவான்" மற்றும் "பெஹச்சான்" என்ற தலைப்புகளில் நாம்தேவ் தனது கவிதைகளை வாசித்தார். நீலத்தின் கவிதைகளின் "சப்சே புரி லட்கி", "நயி துனியா கே ரச்சாய்தா", "தும்ஹாரி உமீதோன் பே கரே உத்ரெங்கே ஹம்" மற்றும் "உத்தோ சங்கர்ஷ் கரோ" ஆகிய தலைப்புகளில் இடம் பெற்றிருந்தன. "சப்சே புரி லட்கி" என்ற கவிதை பெண்களின் உரிமைகள், சமத்துவத்திற்கான போராட்டத்திற்கு உத்வேகம் அளிப்பதாக இருந்தது. மகேந்திர சிங் பெனிவால் "தஸ்வீர்", "அவுர் கப் தக் மரே ஜாகே", "பேடியா" மற்றும் "ஆக்" என்ற கவிதைகளை வாசித்தார். அவை நவீன சமூகத்தின் இரட்டை மனநிலையை மிகவும் துல்லியமாக வெளிப்படுத்தின. தேக்சந்த் வழங்கிய கதைக்கு "குபார்" என்று பெயரிடப்பட்டது. இதில் தலித்துகள்  உட்பட சில சமூகங்களிடையே நிலவி வரும்  அறியாமையின் வேர்கள்  எளிய  முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தன. பூரன் சிங் தனது "ஹவா கா ருக்" கதையை வாசித்தார். இது பல்வேறு அழுத்தங்களின் விளைவாக ஒரு எழுத்தாளர் சமரசம் செய்து கொள்ள வேண்டிய முரண்பாடான சூழலை மையமாகக் கொண்டிருந்தது. இந்நிகழ்ச்சியை இந்தி ஆசிரியர் திரு அனுபம் திவாரி தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

------

(Release ID: 2122040)

TS/SV/KPG/KR


(Release ID: 2122130)