வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
மகாராஷ்டிராவின் கராட் நகரில் சுகாதாரக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவது உறுதி செய்யப்படுகிறது
Posted On:
16 APR 2025 11:09AM by PIB Chennai
நாடு முழுவதும் சுகாதாரக் கழிவு மேலாண்மை ஒரு பெரிய சவாலாக உள்ளது. இக்கழிவுகளை முறையாக அகற்றாமல் இருப்பது சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீர்கேடுகளுக்கு வழிவகுக்கிறது. இருப்பினும், மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரமான கராட், இந்த பிரச்சனையை எதிர்கொள்வதில் ஒரு முன்மாதிரியாக உருவெடுத்துள்ளது. சுகாதார மற்றும் உயிரி மருத்துவக் கழிவுகளை 100% பிரித்தல், சேகரித்தல் மற்றும் செயல்முறை மூலம், கராட் பயனுள்ள மற்றும் நிலையான கழிவு மேலாண்மைக்கு ஒரு அளவுகோலை உருவாக்கித் தந்துள்ளது. சானிட்டரி நாப்கின்கள், டயப்பர்கள் மற்றும் பிற சுகாதாரப் பொருட்கள் போன்ற சுகாதார கழிவுகளை முறையாக அகற்றுவதை உறுதி செய்வது என்பது கராட் நகரில் சுகாதார அபாயங்கள், சுற்றுச்சூழல் தீங்கு மற்றும் சமூகக் களங்கம் ஆகியவற்றைத் தடுக்க உதவியுள்ளது.
கராட்டில், மருத்துவமனைகள், வீடுகள் மற்றும் பிற பகுதிகளிலிருந்து நாள்தோறும் சுமார் 300 முதல் 350 கிலோ சுகாதார கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று, சுகாதாரக் கழிவுகள் குறித்து மக்களிடையே உள்ள மனத்தடைகளை அகற்றுவதாகும். முறையான சுகாதாரக் கழிவு மேலாண்மையின் முக்கியத்துவம் மற்றும் முறையற்ற அகற்றலுடன் தொடர்புடைய சுகாதார அபாயங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். பொறுப்புணர்வுடன் கழிவுகளை வகை பிரித்தல் மற்றும் அகற்றலை ஊக்குவிப்பதில் முக்கியப் பங்கு வகித்த பயிலரங்குகள், சமூக மக்கள் தொடர்பு திட்டங்கள் மற்றும் பொது சேவை அறிவிப்புகள் போன்ற முயற்சிகள் மூலம் குடியிருப்பாளர்களுக்கு கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான புதுமையான உத்திகளை நகரம் பின்பற்றி வருகிறது.
***
(Release ID: 2122026)
TS/IR/RR/KR
(Release ID: 2122036)
Visitor Counter : 21