நித்தி ஆயோக்
வாகனத் தொழில்: உலகளாவிய உற்பத்தி, வர்த்தகச் சூழலில் இந்தியாவின் பங்கேற்பை அதிகரித்தல்
प्रविष्टि तिथि:
15 APR 2025 3:13PM by PIB Chennai
உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.1 சதவீத பங்களிப்பை இந்தியாவின் வாகனத் துறை கொண்டுள்ளது. உலகளாவிய வாகன உற்பத்தியில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.
ஒரு வலுவான உற்பத்தி அடித்தளம் இருந்தபோதிலும், உலகளாவிய வாகன உதிரி பாக வர்த்தகத்தில் இந்தியா 3% பங்கை மட்டுமே கொண்டுள்ளது. இது விரிவாக்கத்திற்கான தேவையை எடுத்துக்காட்டுகிறது. இத்துறையில் அதற்கேற்ப அதிக வாய்ப்புகளும் உள்ளன.
2030க்கான வாகன உற்பத்தி செயல்திட்டமானது, உற்பத்தியை 145 பில்லியன் டாலர் மதிப்புக்கும், ஏற்றுமதியை 60 பில்லியன் டாலராகவும் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்துடன் 2 முதல் 2.5 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரதமரின் மின் வாகனத் தயாரிப்பு திட்டமான ஃபேம்(FAME), பிஎம் இ டிரைவ் (PM E-DRIVE), உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகைத் திட்டம் போன்ற அரசுத் திட்டங்கள் மின்சார வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவியுள்ளன. இதில் ₹66,000+ கோடிக்கும் அதிகமான முதலீடுகள் பெறப்பட்டுள்ளன.
சீர்திருத்தங்களோடு, உலகளாவிய உற்பத்தி, வணிகமயமாக்கல் (உலகளாவிய மதிப்புச் சங்கிலி -ஜிவிசி GVC) ஒருங்கிணைப்பு இருக்கும் சூழலில், இந்தியா தனது உலகளாவிய வாகன பாகங்கள் வர்த்தகப் பங்கை 3 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் வரை 2030-க்குள் உயர்த்த முடியும்.
2024 ஏப்ரல் 11 அன்று, நிதி ஆயோக் ' வாகனத் தொழிலில் உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் இந்தியாவின் பங்கேற்பை மேம்படுத்துதல்' என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை வாகனத் துறையில் இந்தியாவின் உலகளாவிய மதிப்புச் சங்கிலி (ஜிவிசி) திறனை எடுத்துக் காட்டுகிறது.
இந்தியாவின் வாகனத் தொழில் நாட்டின் உற்பத்தியிலும் பொருளாதார வளர்ச்சியிலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒட்டு மொத்தமாக வாகன பாகங்களை இணைத்து முழு வாகனமாக உருவாக்குதல், உதிரி பாகங்கள் உற்பத்தி, வாகங்களுக்கான எஃகு உற்பத்தி, வாகனங்களில் மின்னணுவியல் பாகங்கள், டயர்களுக்கான ரப்பர், வாகனங்களில் தகவல் தொழில்நுட்ப அம்சங்கள் போன்ற முக்கியமான தொழில் பிரிவுகளுடன் ஆழமான தொடர்புகள் வரை இந்தத் துறை ஒரு பரந்த சூழல் அமைப்பை உள்ளடக்கியுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், இந்தியா வாகன உற்பத்தியில் அதிவேக வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2023-24-ம் ஆண்டில் மட்டும் 28 மில்லியனுக்கும் அதிகமான எண்ணிக்கையில் வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன . இது பல லட்சக்கணக்கான நேரடி, மறைமுக வேலை வாய்ப்புகளையும் உருவாக்குகிறது. இந்தியாவின் பசுமை வாகனப் போக்குவரத்து மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
உலகளாவிய வாகன பாகங்கள் சந்தை 2022-ம் ஆண்டில் 2 டிரில்லியன் டாலர் மதிப்புடையதாக இருந்தது. இந்தியாவில் வலுவான உற்பத்தி அடித்தளம் இருந்தபோதிலும், உலகளவில் வர்த்தகம் செய்யப்படும் வாகன உதிரிபாக சந்தையில் இந்தியாவின் பங்கு வெறும் 3 சதவீதமாக அதாவது 20 பில்லியன் டாலராக மட்டுமே உள்ளது. இடைவெளிகளைக் குறைக்க கட்டமைப்பு சீர்திருத்தங்கள், உத்திசார் முதலீடுகள், ஒருங்கிணைந்த தொழில்துறை கொள்கை அணுகுமுறை ஆகியவை தேவை. இவற்றின் மூலம் இந்தியா தனது ஏற்றுமதியை 60 பில்லியன் டாலராக மூன்று மடங்கு உயர்த்த முடியும்.
இந்தியாவில் உற்பத்தி செய்வோம் (மேக் இன் இந்தியா) தற்சார்பு பாரதம் (ஆத்மநிர்பர் பாரத்) போன்ற முன்முயற்சிகளின் கீழ் உலகளாவிய உற்பத்தி மையமாக மாறுவதற்கான நடவடிக்கையில் இந்தியா தற்போது இறங்கியுள்ளது.
மின்சார வாகனங்களின் எழுச்சி, டிஜிட்டல் ஒருங்கிணைப்பு, மேம்பட்ட உற்பத்தி, நிலைத்தன்மை, சுழற்சிப் பொருளாதாரம் ஆகியவை இத்துறையின் வளர்ச்சிக்கான அம்சங்களாகும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், உள்கட்டமைப்பு முதல் ஆராய்ச்சி - மேம்பாடு வரை திட்டமிட்ட நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதன் மூலம், இந்தியா அதிக மதிப்புள்ள வாகன உதிரி பாகங்களுக்கான உற்பத்தி மையமாக மாற வழிவகுக்கும். லட்சியமும் சரியான செயல்பாடும் இணையும்போது, அடுத்த தலைமுறை வாகனத் தீர்வுகளில் உலக அளவில் சிறந்த நாடாக இந்தியா மாறும்.
***
(Release ID=2121826)
TS/PLM/AG/KR
(रिलीज़ आईडी: 2121862)
आगंतुक पटल : 64