பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திரு. ஹரிஷ்பாய் நாயக் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 12 APR 2025 2:29PM by PIB Chennai

ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங்கத்தின் மூத்த பிரச்சாரகரான திரு. ஹரிஷ்பாய் நாயக் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சேவை நடவடிக்கைகள் மற்றும் அமைப்பு ரீதியான பணிகளில் அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும் என்று திரு மோடி கூறியுள்ளார்.

சமூக ஊடக  எக்ஸ்  பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

"ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் மூத்த பிரச்சாரகர் திரு. ஹரிஷ்பாய் நாயக் மறைவு வருத்தம் அளிக்கிறது. சேவை நடவடிக்கைகள் மற்றும் நிறுவனப் பணிகளில் அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்.

அவர் தனது முழு வாழ்க்கையையும் நாட்டிற்காக அர்ப்பணித்தார் என்பதும், இறந்த பிறகு, அவரது விருப்பப்படி எதிர்கால சந்ததியினரின் கல்விக்காக உடல் தியாகம் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரது ஆத்மா சாந்தியடைய  இறைவன் அருள் புரியட்டும்.

ஓம் சாந்தி...!!"

****

PKV/DL


(Release ID: 2121210) Visitor Counter : 17