தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ட்ராய் அதிகாரிகள் போல ஆள்மாறாட்ட மோசடி அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

Posted On: 07 APR 2025 4:45PM by PIB Chennai

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய(ட்ராய்) அதிகாரிகள் என்ற பெயரில் மோசடி நபர்கள் அனுப்பும் தகவல்கள் அல்லது தொலைபேசி அழைப்புகள்  வாயிலாக வாடிக்கையாளர்களிடம் அவர்களது அலைபேசி இணைப்பு துண்டிக்கப்படும் என்று அச்சுறுத்தி பணம் பறிக்கும்  சட்டவிரோத செயல்கள் நடப்பதாக அண்மையில் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.

இதனையடுத்து இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ள அறிக்கையில், அலைபேசி எண் துண்டிப்பது குறித்த எவ்வித தகவல்களையும் தொலைபேசி அழைப்பு வாயிலாகவோ அல்லது பிற வழிகளிலோ வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும் நடைமுறை எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

தொலைபேசி இணைப்பைதா துண்டிப்பது தொடர்பான செய்திகளைத் தெரிவிப்பதற்கு வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ள எந்தவொரு மூன்றாம் தரப்பு முகமையையும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அங்கீகரிக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து வருவதாகக் கூறும் எந்தவொரு தகவல் தொடர்பும் (அழைப்பு, செய்தி அல்லது அறிவிப்பு) மற்றும் அலைபேசி எண் துண்டிக்கப்படுவதாக அச்சுறுத்துவது போன்றவை மோசடி முயற்சியாகவே கருதப்பட வேண்டும் என்றும் அத்தகைய செய்திகள் மீது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சைபர் குற்றம், நிதிசார் மோசடிகள் தொடர்பாக தொலைத்தொடர்பு சேவைகள்  தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க தொலைத்தொடர்புத்துறை  சஞ்சார் சாத்தி தளத்தில் உள்ள சக்ஷு வசதி மூலம் சந்தேகத்திற்குரிய மோசடி தகவல் தொடர்புகள் குறித்து புகார் தெரிவிக்க மக்கள் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. மோசடியான அழைப்புகள் குறித்து புகார் அளிப்பதற்கு  https://sancharsaathi.gov.in/sfc/ என்ற இணையதள முகவரியையும் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இணையதள குற்றங்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிகழ்வுகளுக்கு பாதிக்கப்பட்டவர்கள் இதற்கென பிரத்யேக உதவி தொலைபேசி எண் '1930' அல்லது https://cybercrime.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் புகார் அளிக்கலாம் என்றும்  அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2119782

***

TS/SV/LDN/KR/DL


(Release ID: 2119860) Visitor Counter : 18