மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் (BFSI) துறையில் சைபர் பாதுகாப்புக்கு உதவும் வகையில் முதல் டிஜிட்டல் அச்சுறுத்தல்கள் அறிக்கையை இந்தியா அறிமுகப்படுத்துகிறது
प्रविष्टि तिथि:
07 APR 2025 5:27PM by PIB Chennai
வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீட்டு துறைகளில் சைபர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளின் ஒரு முயற்சியாக, சர்வதேச சைபர் பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்து டிஜிட்டல் அச்சுறுத்தல் தொடர்பான அறிக்கையை அறிமுகப்படுத்த இந்தியா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்த அறிக்கையை நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை செயலாளர் திரு எம் நாகராஜு, மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு எஸ் கிருஷ்ணன், கணினி அவசர கால மீட்புக்குழுவின் தலைமை இயக்குநர் டாக்டர் சஞ்சய் பாஹல் சிசா அமைப்பின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான திரு தர்ஷன் சாந்தமூர்த்தி ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
இணைய பாதுகாப்பில் உத்திசார் கூட்டு முயற்சி
தொடர்பான இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு எஸ்.கிருஷ்ணன் நிதித் துறையின் விரைவான டிஜிட்டல் மாற்றத்துடன் தொடர்புடைய வளர்ந்து வரும் இணைய வழி அச்சுறுத்தல்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
வங்கி, நிதி சேவைகள், காப்பீடு ஆகிய துறைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய துறைகளாக இருப்பதால், இணைய வழி தாக்குதல்கள் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், இணையவழி அச்சுறுத்தல்களை சமாளிக்க பல்வேறு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இணைய வழி அச்சுறுத்தல்களை உரிய நேரத்தில் கண்டறிந்து மீட்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு தரவுகளை பாதுகாப்பதற்கு அதுதொடர்பான நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது.
சிசா அமைப்புடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த அறிக்கையானது வங்கிகள், நிதிசார் சேவை வழங்கும் நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் இணைதளங்களை பாதுகாக்கவும், நிதிசார் பரிவர்த்தனைகளுக்கான அச்சுறுத்தல்களை சமாளிக்கவும், அதிநவீன இணையவழி தாக்குதல்களை திறம்பட எதிர்கொள்ளவும் ஒரு கூட்டு இணைய பாதுகாப்பு உத்திசார் நடவடிக்கையை உருவாக்கவும் தேவையான தகவல்களை வழங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2119801
***
TS/SV/LDN/KR/DL
(रिलीज़ आईडी: 2119858)
आगंतुक पटल : 109