பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
இருவார கால ஊட்டச்சத்து இயக்கம் 2025 (ஏப்ரல் 8 முதல் ஏப்ரல் 23 வரை)
Posted On:
07 APR 2025 5:24PM by PIB Chennai
• இரு வார கால ஊட்டச்சத்து இயக்கத்தின் 7 வது பகுதியை 2025 ஏப்ரல் 8 முதல் 22 வரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
• ஊட்டச்சத்து இயக்கம் தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரியத்தின் கலவையுடன் குழந்தைகள் மற்றும் மகளிரிடையே ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
• இரு வார கால ஊட்டச்சத்து இயக்கம் 2025 ஒரு குழந்தையின் வாழ்க்கையின் முதல் 1,000 நாட்களைக் குறிக்கிறது. ஏனெனில் இது குழந்தை வளர்ச்சிக்கு மிக முக்கியமான காலமாகும்.
• தொழில்நுட்பத்தின் பயன்பாடு - ஊட்டச்சத்து கண்காணிப்பு அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து சேவைகளை நிகழ்நேரத்தில் கண்காணிக்க உதவுகிறது.
• மேம்பட்ட அணுகலுக்காக பயனாளிகள் இப்போது போஷன் டிராக்கர் வெப் செயலி மூலம் தாமாகவே பதிவு செய்து கொள்ளலாம்.
• ஊட்டச்சத்து குறைபாட்டை முன்கூட்டியே கண்டறிவதற்கும் சமூக அடிப்படையிலான மேலாண்மைக்கும் உதவுகிறது.
• இரு வார கால ஊட்டச்சத்து இயக்கம் ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளை ஊக்குவிப்பதன் மூலமும் குழந்தை பருவ உடல் பருமன் குறித்தும் கவனம் செலுத்துகிறது
.
அறிமுகம்
ஒவ்வொரு குழந்தையும் ஒரு ஆரோக்கியமான தொடக்கத்திற்கு தகுதியான குழந்தைதான். ஒவ்வொரு தாய்க்கும் சரியான ஊட்டச்சத்து தேவை. ஒவ்வொரு குடும்பமும் சத்தான உணவை அணுகுவதற்கு தகுதியானது. எனினும் இந்தியாவில் லட்சக்கணக்கானவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஒரு நெருக்கடியாகவே உள்ளது. இது தனிநபர்களை மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்தையும் பாதிக்கிறது. முழுமையான அணுகுமுறையின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து விளைவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முதன்மைத் திட்டமான ஊட்டச்சத்து இயக்கத் திட்டத்தை(போஷன் அபியான்) அரசு 2018 மார்ச் 8 அன்று தொடங்கியது. அதன் முக்கிய முயற்சிகளில் ஒன்றான இரு வார கால ஊட்டச்சத்து இயக்கமானது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்வதில் சமூக பங்களிப்பை ஊக்குவிப்பதற்கும் ஒரு சக்திவாய்ந்த தளமாக உருவெடுத்துள்ளது.
இரு வார கால ஊட்டச்சத்து இயக்கத்தின் 7-வது பதிப்பு நாளை முதல் ஏப்ரல் 23 வரை நடைபெற உள்ளது.
வருடாந்திர ஊட்டச்சத்து விழிப்புணர்வு இயக்கமான இரு வார கால ஊட்டச்சத்து இயக்கம், மற்றொரு இயக்கமாக மட்டுமல்லாமல் செயல்படுவதற்கான அழைப்பாகவும் உள்ளது. தாய் மற்றும் குழந்தை ஊட்டச்சத்து, பயனாளிகளுக்கான மின்னணு அணுகல் மற்றும் குழந்தைப் பருவ உடல் பருமனை எதிர்த்துப் போராடுதல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட கருப்பொருள்களுடன், இரு வார கால ஊட்டச்சத்து இயக்கத்தின் 7-வது பதிப்பு ஊட்டச்சத்து நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான தலையீடுகளில் கவனம் செலுத்துகிறது.
இரு வார கால ஊட்டச்சத்து இயக்கம் 2025 செயல்பாடுகள்
இரு வார கால ஊட்டச்சத்து இயக்கம் 2025 என்பது மகளிர் மற்றும் குழந்தைகள் மீது முக்கிய கவனம் செலுத்தும் சத்தான இந்தியாவை உருவாக்குவதற்கான ஒரு படியாகும். மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களும், துறைகளும், நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களுடன் இணைந்து, பல்வேறு செயல்பாடுகளுக்கு ஏற்பாடு செய்து வருகின்றன:
- கர்ப்பகால பராமரிப்பு, சரியான ஊட்டச்சத்து மற்றும் வழக்கமான சுகாதார பரிசோதனைகளுக்கு முன்னுரிமை அளிப்பது.
- ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக உறுதிமொழி எடுத்துக் கொள்வது - ஆரோக்கியமாக உண்பது, சுறுசுறுப்பாக இருப்பது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது.
- சீரான மற்றும் ஆரோக்கியமான உணவை உண்ணுவது.
- தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தல்.
- ஊட்டச்சத்து கண்காணிப்பு செயலியில் பதிவு செய்தல்..
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் – https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2119796
***
TS/IR/RR/KR/DL
(Release ID: 2119855)
Visitor Counter : 253