பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மிஷன் சக்தியின் கீழ் பால்னா திட்டம்

Posted On: 07 APR 2025 4:13PM by PIB Chennai

2022 ஆம் ஆண்டில், முந்தைய தேசிய குழந்தைகள் காப்பகத் திட்டமானது  'மிஷன் சக்தி'யின் 'சமர்த்யா' துணைத் திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்டு பால்னா திட்டம்(தொட்டில் ) எனப் பெயரிடப்பட்டது. பால்னா என்பது மாநில/யூனியன் பிரதேச அரசுகளின் பங்களிப்பை உறுதி செய்யும் ஒரு மத்திய நிதியுதவி திட்டமாகும். இது சிறப்பான அன்றாட கண்காணிப்பு மற்றும் முறையாக செயல்படுத்துவதை உறுதி செய்கிறது. இதற்கு மத்திய மாநில மற்றும் சட்டமன்றம் கொண்ட யூனியன் பிரதேச அரசுகளின்  நிதிப் பங்கு 60:40 என்ற விகிதத்திலும் வடகிழக்கு மற்றும் சிறப்பு வகை மாநிலங்களுக்கு  90:10 என்ற விகிதத்திலும் இருக்கும். சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசங்களுக்கு, 100% நிதி மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

பால்னா திட்டத்தின் நோக்கம் என்பது குழந்தைகளுக்கு (6 மாதங்கள் முதல் 6 வயது வரை) பாதுகாப்பான சூழலில் தரமான குழந்தை காப்பக வசதி, ஊட்டச்சத்து ஆதரவு, குழந்தைகளின் சுகாதாரம், அறிவாற்றல் மேம்பாடு, வளர்ச்சி கண்காணிப்பு, நோய்த்தடுப்பு ஆகியவற்றை வழங்குவதாகும். பால்னாவின் குழந்தை காப்பக வசதிகள் அனைத்து தாய்மார்களுக்கும் அவர்களின் வேலைவாய்ப்பு நிலையைப் பொருட்படுத்தாமல் வழங்கப்படுகின்றன.

மேற்கூறிய முதன்மை நோக்கத்தைத் தவிர, மகப்பேறு சலுகைச் சட்டத்தின் பிரிவு 11 -ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை நிறுவனங்கள் கடைப்பிடிப்பதைக் கண்காணிப்பதும் இதன் நோக்கமாகும். இந்த நோக்கத்திற்காக, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், அந்தந்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறைகளுடன் இணைந்து, சட்டப்படி அமைக்கப்பட்ட குழந்தை காப்பகங்கள் தொடர்பான விவரங்களை வழங்கவும், நிறுவனங்களைப் பதிவு செய்வதை எளிதாக்குவதற்காக ஒரு செயலி/போர்ட்டலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் பால்னா திட்டம் ஆராயும்.

அங்கன்வாடி மற்றும் குழந்தைகள் காப்பகத் திட்டம், குறிப்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் மற்றும் போஷன் இயக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது. இது தொழிலாளர் சட்டங்கள் மற்றும் மகப்பேறு சலுகைகள் சட்டத்தின் கீழ் உள்ள சட்டங்களுக்கு இணங்க உள்ளது.2025 , பிப்ரவரி நிலவரப்படி, 1,761 அங்கன்வாடி மற்றும் குழந்தை காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன, அவற்றில் 28,783 பயனாளிகள் உள்ளனர். இது தவிர, நாடு முழுவதும் 1,284 தனித்து செயல்படும் குழந்தை காப்பகங்களும் உள்ளன. அவற்றில் 23,368 பயனாளிகள் உள்ளனர்.

2024-25 நிதியாண்டில் ரூ. 150.11 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 2024, டிசம்பர் 19 நிலவரப்படி ரூ. 43.66 கோடி விடுக்கப்பட்டுள்ளது.

6 மாதங்கள் முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு பாதுகாப்பான, வளர்ப்பு மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை வழங்குவதன் மூலம், குழந்தைகள் முழுமையான பராமரிப்பு, ஊட்டச்சத்து, கல்வி மற்றும் சுகாதார சேவைகளைப் பெறுவதை பால்னா திட்டம் உறுதி செய்கிறது. முக்கிய அமைச்சகங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப நெகிழ்வுத்தன்மையுடன், ஆரோக்கியமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பாலின உணர்திறன் கொண்ட சமூகத்திற்கான அடித்தளத்தை பால்னா வலுப்படுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2119769

****

TS/SMB/LDN/KR


(Release ID: 2119808) Visitor Counter : 33


Read this release in: Hindi , English , Urdu , Bengali