பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இலங்கை தமிழ் சமூகத் தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பு

प्रविष्टि तिथि: 05 APR 2025 9:49PM by PIB Chennai

இலங்கைத் தமிழ் சமூகத் தலைவர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி கொழும்பில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது மதிப்பிற்குரிய தமிழ் தலைவர்களான இரா.சம்பந்தன், திரு மாவை சேனாதிராஜா ஆகியோரின் மறைவுக்கு அவர் இரங்கல் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டதாவது:

"இலங்கைத் தமிழ் சமூகத்தின் தலைவர்களை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு தனிப்பட்ட முறையில் அறிமுகமான தமிழ் தலைவர்களான மதிப்பிற்குரிய  இரா.சம்பந்தன், திரு மாவை சேனாதிராஜா ஆகியோரின் மறைவுக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்தேன். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் சமூகத்தினர் சமத்துவம், கண்ணியம் மற்றும் நீதியுடன் வாழ்வதற்கான அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினேன். எனது பயணத்தின் போது தொடங்கப்பட்ட பல திட்டங்கள் மற்றும் முயற்சிகள், அவர்களின் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார முன்னேற்றத்திற்கு பங்களிக்கும்.

***

(Release ID: 2119403)

RB/RJ


(रिलीज़ आईडी: 2119522) आगंतुक पटल : 90
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam