புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

"இந்தியாவில் 2024-ம் ஆண்டில் பெண்கள் மற்றும் ஆண்கள்: தேர்ந்தெடுக்கப்பட்ட குறியீடுகள் மற்றும் தரவுகள்" என்ற தொகுப்பை புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டது"

Posted On: 06 APR 2025 8:47AM by PIB Chennai

மத்திய அரசின் புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் "இந்தியாவில் 2024-ம் ஆண்டில் பெண்கள் மற்றும் ஆண்கள் 2024: தேர்ந்தெடுக்கப்பட்ட குறியீடுள் மற்றும் தரவுகள்" என்ற தலைப்பில் அதன் வெளியீட்டின் 26 வது பதிப்பை வெளியிட்டது.

இந்த வெளியீடு இந்தியாவில் பாலின சூழலின் விரிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது. மக்கள் தொகை, கல்வி, சுகாதாரம், பொருளாதார பங்கேற்பு முடிவெடுத்தல் போன்ற முக்கிய பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிகாட்டிகள், தரவுகளை இதுஙவழங்குகிறது. இவை அனைத்தும் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / அமைப்புகளிடமிருந்து பெறப்படுகின்றன. அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தி, இது நகர்ப்புற-கிராமப்புற இடைவெளிகள், பல்வேறு புவியியல் பகுதிகளில் பாலின வேறுபாடு போன்ற தரவுகளை முன்வைக்கிறது. இது பெண்களும் ஆண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், வாய்ப்புகளைப் பற்றிய நுணுக்கமான புரிதலை எளிதாக்குகிறது.

இது ஒரு முக்கியமான ஆதாரமாக செயல்படுகிறது. இது பாலின சமத்துவத்தின் முன்னேற்றம், தொடர்ச்சியான ஏற்றத்தாழ்வுகள் என இரண்டையும் எடுத்துக்காட்டுகிறது. சமூக-பொருளாதார குறிகாட்டிகளை பகுப்பாய்வு செய்வதன் மூலமும், போக்குகளை முன்னிலைப்படுத்துவதன் மூலமும், நிலையான - உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் பாலின உணர்திறன் கொள்கைகளை உருவாக்க கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் பிற பங்குதாரர்களுக்கு இது அதிகாரம் அளிக்கிறது.

இந்த வெளியீடு புள்ளியியல் அமைச்சகத்தின் இணையதளான https://mospi.gov.in/ தளத்தில் இடம்பெற்றுள்ளது.

***

(Release ID: 2119441)

PLM/ RJ


(Release ID: 2119518) Visitor Counter : 38