வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஸ்டார்ட் அப் மஹாகும்ப மேளா- 2025-ல் அரசு மின் சந்தை தளம் புத்தொழில்களின் சக்தியைக் காட்சிப்படுத்தியது

Posted On: 06 APR 2025 10:05AM by PIB Chennai

ஸ்டார்ட் அப் மகாகும்பமேளா - 2025, சனிக்கிழமை புதுதில்லியில் நிறைவடைந்தது. இது இந்தியாவின் தொழில்முனைவோர் சூழல் அமைப்பின் வளர்ந்து வரும் வலிமையை எடுத்துக்காட்டியது. இதில் முக்கிய பங்கேற்பாளர்களில் ஒருவராக அரசு மின்னணு சந்தை (GeM -ஜிஇஎம்) இருந்தது. இது புத்தொழில் வளர்ச்சியை ஆதரிப்பதில் தனது பங்கை எடுத்துக்காட்டியதுடன் புதுமையையும் உள்ளடக்கிய வளர்ச்சியையும் ஊக்குவிப்பதற்கான கருவியாக பொதுக் கொள்முதலின் திறனை எடுத்துக் காட்டியது.

ஒரு உத்திசார் ஆதரவுப் பங்குதாரர் என்ற முறையில், ஜிஇஎம் இந்த நிகழ்வின் போது பரந்த அளவிலான புத்தொழில்கள், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டது. அரசு சந்தைகளுக்கான அணுகலை எளிதாக்குவதன் மூலமும், புதிய வாய்ப்புகளை ஊக்குவிப்பதன் மூலமும், தற்சார்பு இந்தியாவின் பரந்த பார்வைக்கு பங்களிப்பதன் மூலமும் இந்திய புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஆதரிப்பதற்கான தொடர்ச்சியான முயற்சியை அதன் பங்கேற்பு பிரதிபலித்தது.

இந்த நிகழ்வில் வேளாண் தொழில்நுட்பம், உயிரி தொழில் நுட்பம், மருத்துவ தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, கேமிங் போன்ற பலவற்றில் இந்தியாவின் வலிமையைக் கொண்டாடும் துறை சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஜிஇஎம்-ன் பங்கேற்பு, புதுமைக் கண்டுபிடிப்பாளர்களுக்கும், அரசுத் தரப்பில் வாங்குபவர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, விரைவான அணுகல், சந்தை வாய்ப்பு ஆகியவற்றை செயல்படுத்தும் அதன் நோக்கத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.

 

அரசு மின்னணு சந்தையின் அரங்கம் 70-க்கும் மேற்பட்ட புதுமையான புத்தொழில் நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அமைந்ததுஇதுவரை, ஜிஇம் 30,000-க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்களுக்கான பரிவர்த்தனைகளில் 38,500 கோடி மதிப்பிலான வணிகத்தில் பங்களித்துள்ளது.

***

(Release ID: 2119462)

PLM/ RJ


(Release ID: 2119503) Visitor Counter : 27