சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறுபான்மையின சமூகங்களின் முழுமையான வளர்ச்சிக்கு அரசு உறுதிபூண்டுள்ளது: மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு

Posted On: 05 APR 2025 5:13PM by PIB Chennai

சிறுபான்மையின சமூகங்களின் முழுமையான வளர்ச்சியில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.

ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் லோக் சம்வர்தன் பர்வ் என்ற நிகழ்வை நாளை (06.04.2025) அவர் தொடங்கி வைக்கிறார்இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், சிறுபான்மையினரின் பாரம்பரிய கைவினைப் பொருட்களையும் உணவு வகைகளையும் ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் கூறினார். சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு 2025 ஏப்ரல் 13 வரை நடைபெறும்.

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு ஒமர் அப்துல்லா இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகவும், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொள்வார்கள். நாடு முழுவதிலுமிருந்து பல பிரமுகர்கள், மூத்த அரசு அதிகாரிகள் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லோக் சம்வர்தன் பர்வ், சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த கைவினைஞர்கள், சமையல் நிபுணர்களுக்கு அவர்களின் கைவினைப் பொருட்கள், பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்த ஒரு துடிப்பான தேசிய தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு முக்கிய சுற்றுலா ஈர்ப்பான துலிப் பருவத்துடன் இணைந்து, இந்த நிகழ்வு குறிப்பிடத்தக்க பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பங்கேற்பாளர்களுக்கு சந்தை வெளிப்பாடு, வாழ்வாதார வாய்ப்புகளை இது மேம்படுத்தும்.

இந்த கண்காட்சியில் 25 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் பங்கேற்று தங்களது பொருட்களைக் காட்சிப்படுத்துவார்கள். 12 மாநிலங்களைச் சேர்ந்த 16 சமையல் நிபுணர்கள் அந்தந்த பிராந்தியத்தில் சுவையான உணவுகளை வழங்குவார்கள்.

சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் மக்கள், சுற்றுலாப் பயணிகள், கலை ஆர்வலர்கள், கலாச்சார ஆர்வலர்களை லோக் சம்வர்தன் பர்வ் அழைக்கிறது.

 

***

(Release ID: 2119269)

PLM/RJ


(Release ID: 2119290) Visitor Counter : 15