ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் கீழ் திரிபுரா, ஒடிசா மாநிலங்களுக்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான திட்டங்களை ஊரக வளர்ச்சி அமைச்சகம் அறிவித்துள்ளது

Posted On: 05 APR 2025 11:25AM by PIB Chennai

கிராமப்புற போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தவும் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, திரிபுரா, ஒடிசா மாநிலங்களுக்கு பிரதமரின் ஜன்மன் (பிரதம மந்மிரி ஜன்ஜதி ஆதிவாசி நியாய மகா அபியான - PM-JANMAN) திட்டத்தின் கீழ் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

திரிபுரா மாநிலத்திற்கு 76.47 கோடி மதிப்பீட்டில் 84.352 கி.மீ நீளமுள்ள 25 சாலைகள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

ஒடிசா மாநிலத்தில் 69.65 கோடி மதிப்பீட்டில் 63.271 கி.மீ. நீளமுள்ள 26 சாலைகள், 2 பாலங்கள் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

இந்த மைல்கல் முயற்சியின் நோக்கங்கள்:

- இந்த மாநிலங்களில் உள்ள பழங்குடியின குடியிருப்புகளுக்கு அனைத்து பருவநிலைகளுக்கும் ஏற்ற சாலை இணைப்பை வழங்குதல்.

- இந்த மாநிலங்களில் வாழும் பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துதல்.

- தொலைதூர கிராமங்களுக்கும் நகர்ப்புற மையங்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, கிராமப்புறங்களில் இணைப்பை மேம்படுத்துதல்.

- பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சிவர்த்தகத்தை வளர்த்தல்.

- சுகாதாரம், கல்வி, சந்தைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துதல்.

- வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், உள்ளூர் பொருளாதாரங்களை ஊக்குவித்தல்.

***

(Release ID: 2119160)

PLM / RJ


(Release ID: 2119196) Visitor Counter : 17


Read this release in: Odia , English , Urdu , Marathi , Hindi