ரெயில்வே அமைச்சகம்
ரயில்வேத் துறையில் நான்கு பல்வழித்தடத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இத்திட்டங்கள் 18,658 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளன - இவை 2030-31-க்குள் நிறைவேற்றப்படும்
Posted On:
04 APR 2025 3:03PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், ரயில்வே அமைச்சகத்தின் சார்பில் மொத்தம் 18,658 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள நான்கு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மகாராஷ்டிரா, ஒடிசா, சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 15 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த நான்கு திட்டங்கள், தற்போதுள்ள இந்திய ரயில்வே கட்டமைப்பை சுமார் 1247 கிலோ மீட்டர் அளவுக்கு அதிகரிக்கும்.
இந்த திட்டங்களின் விவரம்:
*சம்பல்பூர் - ஜராப்டா 3-வது, 4 வது பிரிவு
* ஜார்சுகுடா - சசோன் 3- வது, 4-வது பிரிவு
* கர்சியா - நயா ராய்ப்பூர் - பர்மல்காசா 5-வது, 6-வது பிரிவு
* கோண்டியா - பல்ஹர்ஷா இரட்டை ரயில் பாதைத் திட்டம்
மேம்படுத்தப்பட்ட ரயில் பாதைத் திறனானது ரயில் போக்குவரத்தை மேம்படுத்தி, ரயில்வேத் துறைக்கு மேம்பட்ட செயல்பாட்டை வழங்கும். இந்த மல்டி-டிராக்கிங் திட்டங்கள் செயல்பாடுகளை எளிதாக்கி, நெரிசலைக் குறைக்கும். இந்தத் திட்டங்களின் மூலம் 19 புதிய நிலையங்கள் கட்டப்படும். இவற்றால் 3350 கிராமங்களும் அப்பகுதிகளில் உள்ள சுமார் 47.25 லட்சம் மக்களும் பயன் அடைவார்கள்.
----
TS/PLM/KPG/DL
(Release ID: 2119018)
Visitor Counter : 8