உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
விமானப் பொருட்களின் நலன் பாதுகாப்பு மசோதா 2025 நாடாளுமன்றத்தில் நிறைவேறியது
Posted On:
04 APR 2025 4:03PM by PIB Chennai
விமானப் பொருட்களின் நலன் பாதுகாப்பு மசோதா 2025 நாடாளுமன்றத்தில் 03.04.2025 அன்று நிறைவேறியது. விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் திரு ராம்மோகன் நாயுடு அறிமுகம் செய்த இந்த மசோதா, ஏற்கனவே மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இரு அவைகளிலும் இது நிறைவேற்றப்பட்டிருப்பது விமானப் போக்குவரத்து துறையில் இரண்டாவது பெரிய சீர்திருத்தமாக உள்ளது. இந்திய விமானங்களைக் குத்தகைக்கு விடுவது, விமானங்களுக்கு நிதியுதவி செய்யும் சூழல் ஆகியவற்றை உலக தரத்துடன் இணைப்பது இந்த மசோதாவின் நோக்கமாகும். அதிவேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் விமானச் சந்தையில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதில் இது முக்கியமான நடவடிக்கையாகும்.
கேப் டவுன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க நாட்டின் விமான குத்தகை நடைமுறையை எளிதாக்க இந்த மசோதா உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விமானப் போக்குவரத்து துறையில் முதலீடுகளை ஈர்க்கவும் இது பயன்படும். விமானப் போக்குவரத்து செலவை குறைப்பது, இந்த துறையில் புதியவர்கள் நுழைவதை ஊக்குவிப்பது போன்றவற்றிற்கும் இந்த மாற்றங்கள் முக்கியமானதாகும்.
சிவில் விமானப் போக்குவரத்து என்பது இந்தியாவில் பறக்கும் விமானங்களை குறிப்பது மட்டுமல்ல, இது மக்களை இணைப்பது பற்றியது, பொருளாதாரத்தை ஊக்குவிப்பது, வாய்ப்புகளை உருவாக்குவது என்றும் பொருளாகும் என மத்திய அமைச்சர் திரு ராம்மோகன் நாயுடு தமது நிறைவுரையில் குறிப்பிட்டார். போக்குவரத்து துறையில் உலகளாவிய தலைவராக இந்தியாவை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
***
(Release ID: 2118797)
TS/SMB/AG/SG
(Release ID: 2118932)
Visitor Counter : 25