பிரதமர் அலுவலகம்
மகாராஷ்டிராவின் நான்தேடில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகையையும் பிரதமர் அறிவித்துள்ளார்
Posted On:
04 APR 2025 3:21PM by PIB Chennai
மகாராஷ்டிராவின் நான்தேடில் இன்று ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகையாக ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“மகாராஷ்டிராவின் நான்தேட் விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்காக வருத்தமடைந்தேன். தங்களின் அன்பானவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி செய்து வருகிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகையாக ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும். PM @narendramodi”
****
(Release ID: 2118739)
TS/SMB/AG/SG
(Release ID: 2118859)
Visitor Counter : 15