பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்ஃப் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது திருப்புமுனை தருணம் என பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

Posted On: 04 APR 2025 8:19AM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்ஃப் திருத்த மசோதா, முசல்மான் வக்ஃப் ரத்து மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சமூக-பொருளாதார நீதி, வெளிப்படைத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றுக்கான கூட்டு எதிர்பார்ப்பில் இது ஒரு திருப்புமுனை தருணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தள பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, முசல்மான் வக்ஃப் ரத்து மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டிருப்பது, சமூக-பொருளாதார நீதி, வெளிப்படைத்தன்மை, உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றுக்கான நமது கூட்டு தேடலில் ஒரு திருப்புமுனை தருணத்தைக் குறிக்கிறது. இது குறிப்பாக நீண்ட காலமாக குரல் எழுப்ப முடியாமல் வாய்ப்பு மறுக்கப்பட்டு விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கு உதவும்."

"நாடாளுமன்ற விவாதங்கள், குழு விவாதங்களில் பங்கேற்று, தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி இந்தச் சட்டத்தை வலுப்படுத்த பங்களித்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி. நாடாளுமன்றக் குழுவிற்கு தங்கள் மதிப்புமிக்க உள்ளீடுகளை அனுப்பிய எண்ணற்ற மக்களுக்கும் சிறப்பு நன்றி. மீண்டும், விரிவான விவாதம், உரையாடல் ஆகியவற்றின் முக்கியத்துவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது."

"பல ஆண்டுகளாக, வக்ஃப் அமைப்பு வெளிப்படைத்தன்மை பொறுப்புக்கூறல் இல்லாத நிலையில் இருந்தது. இது குறிப்பாக முஸ்லிம் பெண்கள், ஏழை முஸ்லிம்கள், பஸ்மாண்டா முஸ்லிம்களின் நலன்களுக்கு எதிராக இருந்தது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பதோடு, மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும்."

"கட்டமைப்பு மிகவும் நவீனமானதாகவும், சமூக நீதியைக் கொண்டதாகவும் இருக்கும் ஒரு சகாப்தத்தில் நாம் இப்போது நுழைகிறோம். ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்திற்கும் முன்னுரிமை அளிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். வலுவான, அனைவரையும் உள்ளடக்கிய, கருணை உள்ளம் கொண்ட இந்தியாவை நாம்  உருவாக்குகிறோம்."

***


(Release ID: 2118575)

TS/PLM/KPG/SG

 


(Release ID: 2118833) Visitor Counter : 13