சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
சிறுபான்மையினரின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திறன் மற்றும் கல்வித் திட்டங்கள் அமலாக்கம்
प्रविष्टि तिथि:
02 APR 2025 3:04PM by PIB Chennai
சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் சிறுபான்மையினரின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திறன் மற்றும் கல்வித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
பிரதமரின் பாரம்பரிய மேம்பாட்டு திட்டம் (பிஎம் விகாஸ்) என்பது அமைச்சகத்தின் ஒரு முதன்மைத் திட்டமாகும். இது முந்தைய ஐந்து திட்டங்களை ஒருங்கிணைக்கிறது.
தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதிக் கழகம் வழங்கும் கடன் திட்டங்களுடன் பயனாளிகளை இணைப்பதன் மூலம் கடன் பெறும் வசதிகளை எளிதாக்கவும் இந்த திட்டம் வழிவகை செய்கிறது. இத்திட்டத்தின் கீழ்; அமைச்சகம் சில முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது மற்றும் திட்டங்களைத் தேர்ந்தெடுத்து இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இது ஒரு மத்திய அரசின் திட்டமாகும். இது நாடு தழுவிய அடிப்படையில் செயல்படுத்தப்படும்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சிறுபான்மையினர் நலன் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/PKV/RR/SG/DL
(रिलीज़ आईडी: 2117986)
आगंतुक पटल : 39