சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கரைக்கருகில் கடலில் சுரங்கம் தோண்ட உரிமங்கள்

प्रविष्टि तिथि: 02 APR 2025 2:25PM by PIB Chennai

மத்திய அரசு, 28.11.2024 அன்று  கரைக்கருகில் கடலில்  13 சுரங்கங்களுக்கான ஏலத்தைத் தொடங்கியது. கூட்டு உரிமம் வழங்குவதற்காக அதாவது ஆய்வு உரிமம், உற்பத்தி குத்தகை வழங்குவதற்காக  இந்த ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் கேரள கடற்கரைப் பகுதிகளில் உள்ள மூன்று கட்டுமான மணல் தொகுதிகள், குஜராத் கடற்கரைப் பகுதியில் சுண்ணாம்பு மண் 3 தொகுதிகள், பெருநகர நிக்கோபார் தீவில் உள்ள 7 பாலிமெட்டாலிக் தொகுதிகள் ஆகியவை அடங்கும்.

கடலோரப் பகுதிகள் இயக்க உரிமை விதிகள், 2024-ன் விதி 5 (2)-ன் படி, செயல்பாட்டு உரிமையை வழங்குவதற்காக எந்தவொரு கடல்சார் பகுதியையும் அறிவிப்பதற்கு முன்பு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம்  மற்றும் மீன்வளத் துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் / துறைகளுடன் முன் ஆலோசனை கட்டாயமாகும்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி இதனைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2117708

***

TS/SV/KPG/SG


(रिलीज़ आईडी: 2117899) आगंतुक पटल : 25
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu