பிரதமர் அலுவலகம்
தில்லியில் சிலி அதிபர் திரு கேப்ரியல் போரிக் ஃபாண்டை பிரதமர் வரவேற்றார்
Posted On:
01 APR 2025 9:33PM by PIB Chennai
தில்லியில் சிலி அதிபர் திரு கேப்ரியல் போரிக் ஃபாண்டை இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அன்புடன் வரவேற்றார். இது இந்தியா-சிலி கூட்டாண்மையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது. அதிபர் போரிக்கை உபசரிப்பதில் மகிழ்ச்சி தெரிவித்த திரு மோடி, லத்தீன் அமெரிக்காவில் சிலி முக்கிய நட்பு நாடாக இருப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரத் தொடர்புகளை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். கனிமங்கள், எரிசக்தி, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் வேளாண்மை போன்ற முக்கிய துறைகளை ஒத்துழைப்புக்கான மகத்தான வாய்ப்புகள் உள்ள துறைகளாக அவர்கள் அடையாளம் கண்டு விவாதித்தனர்.
சிலியில் யோகா, ஆயுர்வேதம் பிரபலமடைந்து வருவதால், இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார பரிமாற்றத்திற்கு ஒரு சான்றாக சுகாதார நலன் ஒரு நம்பிக்கைக்குரிய வாய்ப்பாக அமைந்தது. மாணவர் பரிமாற்றத் திட்டங்கள் மற்றும் பிற முன்முயற்சிகள் மூலம் கலாச்சார மற்றும் கல்வித் தொடர்புகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் தலைவர்கள் சுட்டிக் காட்டினர்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் எழுதியிருப்பதாவது:
"இந்தியா ஒரு சிறப்பு நண்பரை வரவேற்கிறது!
தில்லியில் அதிபர் கேப்ரியல் போரிக் ஃபாண்டை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். லத்தீன் அமெரிக்காவில் சிலி நமக்கு முக்கியமான நட்பு நாடு. இன்றைய நமது பேச்சுவார்த்தைகள் இந்தியா-சிலி இருதரப்பு நட்புக்கு குறிப்பிடத்தக்க உத்வேகத்தை அளிக்கும்.
@GabrielBoric"
"சிலியுடன் பொருளாதார தொடர்புகளை விரிவுபடுத்த நாங்கள் ஆர்வமாக உள்ளோம். இது தொடர்பாக, விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கான விவாதங்களைத் தொடங்க வேண்டும் என்று அதிபர் கேப்ரியல் போரிக் ஃபாண்ட்டும் நானும் ஒப்புக்கொண்டோம். முக்கியமான கனிமங்கள், எரிசக்தி, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் வேளாண்மை போன்ற துறைகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்.
"குறிப்பாக சுகாதார நலன் இந்தியாவையும், சிலியையும் இன்னும் நெருக்கமாகக் கொண்டுவர பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது. சிலியில் யோகா மற்றும் ஆயுர்வேதத்தின் புகழ் அதிகரித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. கலாச்சார மற்றும் மாணவர் பரிமாற்ற திட்டங்கள் மூலம் நமது நாடுகளுக்கு இடையிலான கலாச்சார தொடர்புகளை வலுப்படுத்துவது முக்கியமானது.
***
(Release ID: 2117553)
TS/IR/AG/SG
(Release ID: 2117752)
Visitor Counter : 9
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam